விருச்சிகம்: கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?.. செய்ய வேண்டியவை இதுதான்.. செய்ய கூடாதவை நோட் பண்ணுங்க
விருச்சிகம் ராசி பலன்: படாத கஷ்டங்களை எல்லாம் தங்கள் வாழ்க்கையில் படும் விருச்சிக ராசிக்காரர்களே கோடீஸ்வரர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன, எந்த விஷயங்களை நீங்கள் அறவே தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 9 க்குரியன் பாதகாதிபதி. கெடுதலை மட்டுமே செய்பவனாக சந்திரன் விளங்குகிறார். பாதகாதிபதியால் எப்போதும் எதாவது ஒரு சங்கடம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். குரு பகவான் தான் உங்களுக்கு பணத்தைக் கொடுப்பார். நிதி மேலாண்மை, வங்கி சார்ந்த விஷயங்கள், வட்டிக்கு விடுவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பணத்தின் மூலம் பணம் செய்யும் தொழில்களைச் செய்வது உங்களுக்கு அமோகமான பலன்களைத் தரும்.

குரு என்பது ஆலயங்கள், ஆன்மீகம், வழிபாடு, தெய்வீகம், தெய்வ நம்பிக்கைகள் தொடர்பான தொழில்கள் நல்ல லாபத்தை தரும். குரு சம்பந்தப்பட்ட விஷயங்களை உங்கள் அலுவலகத்தில் வைப்பது நல்லது. ஜொலிக்கும் தங்க நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். மஞ்சள் நிறம் சார்ந்த ஆடைகளை அணியலாம். பச்சை நிறத்தை எதிலும் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. விஷ்ணு சம்பந்தப்பட்ட சுவாமி படங்களை வைக்காமல் இருப்பது நல்லது.
வெள்ளி நிறத்திலான லட்சுமியை வைப்பது, வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். லட்சுமி பாடல்கள், லட்சுமி மந்திரங்களை கேட்பது நல்லது. குரு சம்பந்தப்பட்ட ஸ்லோகங்களை சொல்வது நல்லது. பெரிய உருவங்கள், யானைகள், பெருத்த சரீரம் கொண்ட ஆஞ்சநேயர், விநாயகர், குபேரன் உருவங்கள், வயிறு பெருத்த தொந்தியுடைய பொம்மைகளை வைப்பது, குபேரன் வயிற்றைத் தடவுகிற புகைப்படங்கள், சிலைகளை பார்ப்பது, வைத்துக் கொள்வது நல்லது.
குரு புத்திரக்காரகன். தங்க மீன்களை திரைச்சீலைகளாகப் பயன்படுத்தலாம். தங்க மீன் சிலைகளை அலுவலக அறையில் வைக்கலாம். அந்த தங்க மீனின் வாயில் பணத்தை வைத்திருப்பது நல்லது. அதேபோல, கோல்டன் மீன்களை வளர்க்கலாம். பச்சை, வெள்ளை நிறத்தை தவிர்ப்பது நல்லது. சந்திரன் பாதகாதிபதி என்பதால் வெள்ளை நிறத்தை தவிர்க்க வேண்டும்.
சந்திரனை நீங்கள் கூப்பிட்டாலே உங்களுக்கு சங்கடம்தான். பொதுவாகவே விருச்சிக ராசிக்காரர்கள் அம்மாவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் மனக் கஷ்டப்படுவது எல்லாம் தாய் சம்பந்தப்பட்ட விஷயங்களாகத்தான் இருக்கும். ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அதனை செய்து முடித்துவிட்டு தாயிடம் சொல்வது நல்லது. பெண் உறவில் சித்தி, பெரியம்மா போன்ற அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களிடம் ஒரு வேலையை செய்து முடித்த பின்னர் சொல்வது நல்லது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொந்த தாய்மாமனும் ஆகமாட்டார். அவரிடம் சொல்லிவிட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அது அவ்வளவு சிறப்பாக முடியாது. எண் 5 ஐ தவிர்ப்பது நல்லது. பச்சை நிறம், விஷ்ணு வேண்டாம். சுக்கிரன், எண் 2, தட்சணாமூர்த்தி, ஐயப்பன், ஆஞ்சநேயர் சிலைகளைப் பயன்படுத்தலாம். உங்களுடைய அலுவலகத்தில் உள்ள மேஜையின் நிறத்தை தங்க நிறத்தில் வைத்துக் கொள்வது நல்லது. கொண்டைக் கடலை ஒரு பணப் பையில் கட்டி வைப்பது நல்லது.
உங்களுக்கு யார் குருவோ அவருடைய சிலைகளை வைத்துக் கொள்ளலாம். வெள்ளி நிற யானைகள் வைக்கலாம். உடைந்த புகைப்படங்கள், உடைந்த சிலைகளை வைத்துக் கொள்வது நல்லதல்ல. ஜோடியாக இருக்கும் சிலைகள், புகைப்படங்களை வைப்பது அதிர்ஷ்டத்தை தரும். ராதா கிருஷ்ணர் உருவங்களை வைக்கலாம். பால் சம்பந்தப்பட்ட விஷயங்கள், வெள்ளை சிவ லிங்கம் போன்ற வெள்ளை நிறங்களை பயன்படுத்தாமல் இருப்பது அமோகமான பலன்களைத் தரும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications