செப்டம்பரில் இந்த 3 ராசிகள் மட்டும் கவனம்.. பணம், உறவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். செல்வ வளம் பெருகும். கடக வீட்டில் நீசபங்க ராஜயோகம் ஏற்படுவதால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எது தவறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். பணம் இருப்போர் பாகப் பிரிவினைகள் போன்ற விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது. 18 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு யாருக்கும் பணம் கொடுப்பது, பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3 ஆம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். கூடப் பிறந்தவர்களால், சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பாகப் பிரிவினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. செப்படம்பர் 20 ஆம் தேதி உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். 24, 25 ஆம் தேதி அமைதியாக இருப்பது நல்லது. சொத்துகளை வாங்கும் யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நீசபங்க ராஜயோகத்தால் அரசு பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையின் அடுத்த படிநிலைக்குச் செல்லும் யோகம் உண்டு.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு 20 ஆம் தேதி வரை வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ராசியில் ராகு இருப்பதால் எதிர்பாலினத்தவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேசாமல் இருப்பது நல்லது. 3, 10க்கு உடைய செவ்வாய் விபரீத ராஜயோகம் அடையவுள்ளார். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். செப்டம்பர் 24 ஆம் தேதி ஐவிஎப், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இந்த நாள் அற்புதமான பாக்கியத்தைக் கொடுக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, முதலீடு விஷயங்களில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும்.
புதன்கிழமைகளில் சுக்கிர ஓரையில் ஹோம் ஸ்ரீ நமஹ என வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சூரியன் 7க்கு உடையவர் 8 இல் மறைவதால் வீட்டில் மனைவியிடம் நிம்மதி இல்லாத நிலைமை ஏற்படும். சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அரசைப் பற்றி விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சத்ய நாராயண பூஜை செய்வது நன்மை.
சனி பகவான் வக்கிரம் பெறுகிறார், குரு உச்சம் பெறுகிறார். தொழில் ரீதியாக எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவி அந்நியோன்யமாக இருக்க வேண்டும். வைரம் அணிவது நல்லது. சில்வர் கலர் நிற ஆடைகள் நல்லது. குங்குமம் வைப்பது நன்மை பயக்கும். லட்சுமி கடாட்சத்துடன் தொழிலை வைத்துக் கொள்வது நல்லது. ஸ்ரீ சுத்த ஹோமம் செய்வது ஏற்றத்தைத் தரும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினர் செப்டம்பர் மாதத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. மனைவி, மனைவி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவோர் காசு கொடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்ட்னர்களிடம் பணம் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
பெண்ணினால் ஆபத்து வருவதற்கான பாதிப்புள்ளது. வீண் வதந்தி ஏற்படும். பெண்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மீறி பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. 2க்கு உடைய செவ்வாய் பகவான் நீச்சமடைந்து, நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பண மழை கொட்டும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பார்வதி, முருகர், குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த ஒரு மாதம் தேவையில்லாத பழக்க வழக்கங்களைத் தவிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும். மனைவி பெயரில் பெரிய முயற்சிகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணம், பொருள்கள் போன்றவற்றை மனைவியிடம் கொடுத்தால் அவை காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 20 ஆம் தேதிக்கு மேல் செய்து கொள்வது நன்மை.
சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இருப்பினும், வம்பு, வழக்குகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 24 ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் பகவானின் அருளால் பணப் பிரச்சனைகள் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 14, 15, 19, 28, 29 ஆகிய நாட்களில் அமைதியாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
