செப்டம்பரில் வேற லெவல் மாற்றம்.. மகரம், கும்பம், மீனத்திற்கு காத்திருக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-horoscope-what-benefits-will-magaram-kumbam-meenam-get-this-month

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு 9க்கு உடைய புதன் பகவான் உச்சமாவதால் லாபம், அதிர்ஷ்டம் கொட்டும். கடனை அடைக்கும் முயற்சிகளில் இந்த மாதம் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இஎம்ஐக்களை ஒருங்கிணைத்து ஒரே கடனுக்கு கீழ் கொண்டு வரும் செயல்கள் சரிவராது. செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் புதிய வெளிச்சம் உண்டாகும்.

புகழ், அரசியல் சர்ச்சை போன்றவை சரியாகும். 20 ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசியில் நீச்சமடைந்து நீசபங்க ராஜயோகம் அடைகிறார். இடம், வீடு, நிலம் வாங்குவது போன்ற அமைப்பு ஏற்படும். லாபமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்ட நாளாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகள் அணிவது நன்மை.

விசாகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று நல்ல காரியங்களைச் செய்வது நல்லது. கோவில் முன்பு இருக்கும் நிலத்தை சமன்படுத்துவது, சுத்தப்படுத்துவது நன்மை பயக்கும். இல்லையெனில் சத்ரு சம்ஹார யோகம் செய்வது ஏற்றததைத் தரும். முருகன் வழிபாடு, முருகன் பாடல்களை கேட்பது நல்லது. 5, 6 ஆம் தேதி அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

ராகு பகவான் உங்களை நோக்கி டிசம்பர் மாதம் பயணித்து வருவதால் விவாகரத்து சம்பவங்களில் ஈடுபடுவோர் சிறிது பொறுத்திருப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது, சிவப்பு நிற மலர் வைத்து முருகரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசியினருக்கு 20 ஆம் தேதி வரை வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ராசியில் ராகு இருப்பதால் எதிர்பாலினத்தவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேசாமல் இருப்பது நல்லது. 3, 10க்கு உடைய செவ்வாய் விபரீத ராஜயோகம் அடையவுள்ளார். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். செப்டம்பர் 24 ஆம் தேதி ஐவிஎப், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இந்த நாள் அற்புதமான பாக்கியத்தைக் கொடுக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, முதலீடு விஷயங்களில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும்.

புதன்கிழமைகளில் சுக்கிர ஓரையில் ஹோம் ஸ்ரீ நமஹ என வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சூரியன் 7க்கு உடையவர் 8 இல் மறைவதால் வீட்டில் மனைவியிடம் நிம்மதி இல்லாத நிலைமை ஏற்படும். சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அரசைப் பற்றி விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சத்ய நாராயண பூஜை செய்வது நன்மை.

சனி பகவான் வக்கிரம் பெறுகிறார், குரு உச்சம் பெறுகிறார். தொழில் ரீதியாக எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவி அந்நியோன்யமாக இருக்க வேண்டும். வைரம் அணிவது நல்லது. சில்வர் கலர் நிற ஆடைகள் நல்லது. குங்குமம் வைப்பது நன்மை பயக்கும். லட்சுமி கடாட்சத்துடன் தொழிலை வைத்துக் கொள்வது நல்லது. ஸ்ரீ சுத்த ஹோமம் செய்வது ஏற்றத்தைத் தரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியினர் செப்டம்பர் மாதத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. மனைவி, மனைவி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவோர் காசு கொடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்ட்னர்களிடம் பணம் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

பெண்ணினால் ஆபத்து வருவதற்கான பாதிப்புள்ளது. வீண் வதந்தி ஏற்படும். பெண்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மீறி பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. 2க்கு உடைய செவ்வாய் பகவான் நீச்சமடைந்து, நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பண மழை கொட்டும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பார்வதி, முருகர், குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த ஒரு மாதம் தேவையில்லாத பழக்க வழக்கங்களைத் தவிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும். மனைவி பெயரில் பெரிய முயற்சிகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணம், பொருள்கள் போன்றவற்றை மனைவியிடம் கொடுத்தால் அவை காணாமல் போவது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 20 ஆம் தேதிக்கு மேல் செய்து கொள்வது நன்மை.

சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இருப்பினும், வம்பு, வழக்குகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 24 ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் பகவானின் அருளால் பணப் பிரச்சனைகள் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 14, 15, 19, 28, 29 ஆகிய நாட்களில் அமைதியாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+