யாருக்கு பணமழை?.. யாருக்கு எச்சரிக்கை?.. செப்டம்பர் மாத 12 ராசிகளின் பலன் இதோ
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.
மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
செப்டம்பர மாதத்தில் இஎம்ஐ போடுவது, கடன் வாங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தாமல் இருப்பது, பெரிய லோன் வாங்காமல் இருப்பது நல்லது. சொத்துகள் சேரும் யோகம் உண்டாகும். சொத்து, பாகப் பிரிவினை பிரச்சனைகள் நீங்கும். பூமி லாபம் கிடைக்கும். சொத்துகள மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். செப்டம்பர் 20 ஆம் தேதி முருகப் பெருமான் வழிபாடு செய்வது, முருகப் பெருமானுக்கு உகந்த மந்திரங்களை ஜெபிப்பது நன்மை பயக்கும். குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சை பெறுவோர் 18 ஆம் தேதிக்கு முன்பு செய்து கொள்வது நல்லது.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு இந்த மாதத்தில் விவாகரத்து கிடையாது. பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி, காதலன், காதலியுடன் பிரச்சனைகள் தீர்ந்து, மீண்டும் ஒன்று சேருவீர்கள். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்வோருக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். நல்ல திருமண வரன்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியினருக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடனை அடைப்பதற்கான யோகம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கிய பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது மேன்மையைத் தரும். குழந்தை தொடர்பான சிகிச்சைகள் நன்மை பயக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டாகும். இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். லாட்டரியில் திடீர் ஜாக்பாட் அடிப்பதற்கான யோகம் உண்டாகும்.
கடக ராசி பலன்
கடக ராசியினருக்கு செல்வ வளம் பெருகும். எது தவறு என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். பணம் இருப்போர் பாகப் பிரிவினைகள் போன்ற விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் செய்து கொள்வது நல்லது. 18 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு யாருக்கும் பணம் கொடுப்பது, பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3 ஆம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். கூடப் பிறந்தவர்களால், சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்ம ராசி பலன்
புதிய தொழில்களை தொடங்குவது, புதிய விஷயங்களைச் செய்வதை தவிர்ப்பது நல்லது. 20 ஆம் தேதி செவ்வாய் நீசபங்கம் ராஜயோகத்தை தருவதால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சரியாகும். அரசு ரீதியான விஷயங்களில் இருந்த டென்ஷன் தீரும். அரசு, போலீஸ், வக்கீல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அரசு ரீதியான பென்டிங் விஷயங்கள் நீங்கும். சத்து குறைபாடு நீங்கும். கூடப் பிறந்தவர்களே எதிரியாக இருந்த நிலைமை எல்லாம் தீரும். ஆரோக்கியம் மேம்படும். 24 ஆம் தேதி இந்தியாவில் தொழில் தொடங்குவது ஏற்றத்தை ஏற்படுத்தும். காஸ்மெட்டிக்ஸ், அலங்காரம் செய்வது, சுற்றுலா, மகிழுந்து, டெக்கரேஷன் செய்வது, ஆண் பெண் உறவுகள் போன்றவை அற்புதமாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு இந்த மாதத்தில் நிறைய விரயம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புகழ், அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். சுக்கிரனோடு புதனும் சேர்வதால ஞானம், கல்வி, அறிவு மேலோங்கும். 24 ஆம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர், புதிதாக கம்பியூட்டர் சென்டர் ஆரம்பிப்போர், நெட்வொர்க்கிங் படிப்போருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆர்டீபிசியல் இன்டெலிஜன்ட் படிப்பதற்கு நல்ல காலகட்டமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மொத்த வியாபாரம் செய்வோருக்கு அற்புதமாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு அரசு உதவிகள் கிடைக்காது. அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போகும். செவ்வாய் நீசபங்கம் ராஜயோகம் பெறுவதால் பண மழை கொட்டும். கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நன்மையைத் தரும். வீடு கட்டுவது, இடம் வாங்குவது நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். செப்டம்பர் 24 ஆம் தேதியை தவறவிடக் கூடாது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆன்டிக் பொருட்கள், விலையுயர்ந்த பொருள்களை விற்பனை செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், கேஸ்டிங் செய்பவர்களுக்கு யோகம் உண்டு.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு நேர விரயம் ஏற்படுவதற்கான மாதமாக இருக்கும். பார்ட்னர்களை நம்பாமல் நீங்களே வேலையில் இறங்குவது நன்மை பயக்கும். 12க்கு உரிய சுக்கிரன் ஆட்சி பெறுவதால் பார்ட்னரால் விரயங்கள் நிச்சயமாக ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும். தொழில், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய லாபங்கள் கொட்டும். மக்கள் உங்களைத் தேடி வருவார்கள். நண்பர்களால் கிடைக்கக்கூடிய லாபங்கள் அதிகரிக்கும். யாரிடமாவது இருந்து உதவி பெற வேண்டும் அல்லது ஆதாயம் பெற வேண்டும் என்றால் 24 ஆம் தேதிக்கு முன்பு கேட்பது நல்லது. செல்வம் உங்களை வந்தடையும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பாலினத்தவரால் உங்கள் பெயர் கெடும் அபாயம் உள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு வேலையில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். பெயர், புகழ் அதிகரிக்கும். பதவி உயர்வு, வெளிநாடு செல்வது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அரசனைப் போல யோகம் உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். அரசியல் நிமித்தமாக அழைப்பு வந்தால் அக்டோபர் மாதம் செல்வது நல்லது. மாமனாரிடம் இருந்து பணங்கள் வந்து சேரும். தொழில் விரிவாக்கம், தொழில் செய்வதற்கு கடன்கள் கிடைக்கும். பணம் வரும் வழிகள் உங்கள் கண்ணுக்குத் தெரியும். பெண்களின் மூலமாக பணம் வந்து சேரும் யோகம் உண்டு. மனைவியின் ராசியால் முன்னேறும் யோகம் உண்டு. அழகு கூடும். ஸ்டேஜ் ஏறும் யோகம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, கலைஞர்களுக்கு யோகம் உண்டாகும்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு லாபம், அதிர்ஷ்டம் கொட்டும். கடனை அடைக்கும் முயற்சிகளில் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இஎம்ஐக்களை ஒருங்கிணைத்து ஒரே கடனுக்கு கீழ் கொண்டு வரும் செயல்கள் சரிவராது. செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் புதிய வெளிச்சம் உண்டாகும். புகழ், அரசியல் சர்ச்சை போன்றவை சரியாகும். 20 ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசியில் நீச்சமடைந்து நீசபங்க ராஜயோகம் அடைகிறார். இடம், வீடு, நிலம் வாங்குவது போன்ற அமைப்பு ஏற்படும். லாபமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்ட நாளாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகள் அணிவது நன்மை.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு 20 ஆம் தேதி வரை வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ராசியில் ராகு இருப்பதால் எதிர்பாலினத்தவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேசாமல் இருப்பது நல்லது. 3, 10க்கு உடைய செவ்வாய் விபரீத ராஜயோகம் அடையவுள்ளார். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். செப்டம்பர் 24 ஆம் தேதி ஐவிஎப், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இந்த நாள் அற்புதமான பாக்கியத்தைக் கொடுக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, முதலீடு விஷயங்களில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும். தொழில் ரீதியாக எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினர் மனைவி, மனைவி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவோர் காசு கொடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்ட்னர்களிடம் பணம் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பெண்ணினால் ஆபத்து வருவதற்கான பாதிப்புள்ளது. வீண் வதந்தி ஏற்படும். பெண்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மீறி பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. 2க்கு உடைய செவ்வாய் பகவான் நீச்சமடைந்து, நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பண மழை கொட்டும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
