செப்டம்பர் மாதம் சம்பவம் இருக்கு!.. மேஷம், ரிஷபம், மிதுனம்.. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-horoscope-will-mesham-rishabam-mithunam-be-lucky-check-the-complete-monthly-prediction

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்

செப்டம்பர் 3 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் உச்சமாகிறார். 18 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் போகிறார். 20 ஆம் தேதி செவ்வாய் கடகத்தில் நீச்சமாகிறார். ஏற்கனவே அங்கு குரு உச்சமாகியுள்ளதால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். இஎம்ஐ போடுவது, கடன் வாங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது. பெரிய லோன்கள் வாங்குவோர் இப்போதைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி, குருவுடன் இணைவதால் சொத்துக்கள் சேரும் யோகம் உண்டாகும். கோர்ட்டில் பிரச்சனையில் உள்ள சொத்துகள், பாகப் பிரிவினை போன்றவை நீங்கி உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்.

பூமி லாபம் கிடைக்கும். எதிர்பாராதவிதமாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துகள மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். செப்டம்பர் 20 ஆம் தேதி முருகப் பெருமான் வழிபாடு செய்வது, முருகப் பெருமானுக்கு உகந்த மந்திரங்களை ஜெபிப்பது நன்மை பயக்கும். 18 ஆம் தேதி சூரிய பகவான் கன்னிக்கு செல்வதால் சூரியனார் கோயிலில் வழிபாடு செய்வது, சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சை பெறுவோர் 18 ஆம் தேதிக்கு முன்பு செய்து கொள்வது நல்லது.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு 3 ஆம் தேதி புதன் பகவான் உச்சமாகிறார். சுக்கிர பகவான் ஆட்சி பெறப் போகிறார். விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்போருக்கு இந்த காலகட்டத்தில் விவாகரத்து கிடையாது. பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

கணவன், மனைவி, காதலன், காதலியுடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு ஒன்று சேருவீர்கள். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்வோருக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். நல்ல திருமண வரன்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும்.

பெண்கள் அழுகு, தோல், காஸ்மெட்டிக் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மனைவி பெயரில் முதலீடு செய்வது, நல்ல விஷயங்களைத் தொடங்குவது போன்றவற்றை செய்வது நல்லது. சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சுக்கிர ஓரையில் புதன் புத்தியில் அருகில் இருக்கும் லட்சுமி கோயிலில் வழிபாடு செய்வது நல்லது. 20, 21, 22 ஆம் தேதிகளில் புதிய விஷயங்களை செய்வது, செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி பலன்

மிதுன ராசியினருக்கு நீங்கள் செய்யும் முயற்சிள் இந்த மாதம் தடைபடும் என்பதால் அடுத்த மாதம் முயற்சி செய்வது நன்மை பயக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. கடனை அடைப்பதற்கான யோகம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கிய பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது.

விட்டுவிட்ட தேவையில்லாத பழக்கவழக்கத்தை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது மேன்மையைத் தரும். 24 ஆம் தேதி சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். இந்த தினம் உங்களுக்கு குழந்தை தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டாகும். இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

லாட்டரியில் திடீர் ஜாக்பாட் அடிப்பதற்கான யோகம் உண்டாகும். நாட்டு மருந்து கடை வைத்துள்ளவர்கள், தங்க வியாபாரி, வெள்ளி வியாபாரி, மருத்துவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் பெரும் புகழைப் பெறுவீர்கள். 23, 24 ஆம் தேதி எந்த விஷயத்தையும் தொடங்காமல் இருப்பது நல்லது. மிதுன ராசிக்கு அற்புதமான மாதமாக இருக்கும். உடல் தெம்பு அதிகரிக்கும். லாபம் கொட்டும். கடனை அடைப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைப்பது நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+