செப்டம்பர் மாத பலன்: மேஷ ராசிக்கு பணவரவு கொட்டும்.. லாபம், முன்னேற்றம் எப்படி இருக்கும்?
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு இந்த செப்டம்பர் மாதம் உன்னதமான பலன்கள் கிடைக்கும். 16 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் நீச்ச நிலையை அடைந்தாலும் நீசபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே 7 ஆம் இடத்தில் இருந்து சுக்கிரன் ராசியைப் பார்ப்பது மேஷம் ராசியினருக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும்.
தைரியம்
வயதிற்கு ஏற்றாற்போல கடன், நோய், வம்பு, வழக்கு, அவமானம் போன்றவற்றை தீர்க்கும் அளவிற்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய பருவத்தினருக்கு நல்ல யோக பலன்கள் கிடைக்கும். காதல் நிறைவேறும். செவ்வாய் 2 மாதம் 7 ஆம் இடத்தில் ஆட்சியாக இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
முன்னேற்றம்
நட்புகள், உறவுகள் போன்றவை கைகொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கான கடன் கிடைக்கும். இடம், நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வளர்ச்சிக்கான கடன்களை வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலுக்காக கடன் வாங்குவது, அதன் மூலம் அற்புதமான லாபங்களைப் பெறுவது போன்ற அமைப்பு உண்டாகும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
கவலை நீங்கும்
பாக்கியாதிபதியாகி குரு பகவான் உச்சத்தில் இருந்து 10, 12, 8 ஆகிய இடங்களைப் பார்ப்பது வெளிமாநிலம், வெளிநாட்டில் இருப்போருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியன் வலிமையாக இருப்பதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் குறையும். பிள்ளைகளால் வருமானங்கள் ஏற்படும். வெகுதூரத்தில் இருக்கும் குழந்தைகளால் நல்லவை நடக்கும்.
லாபம் கொட்டும்
பிள்ளைகளிடம் இருந்து சுப பிரிவுகள் ஏற்படும். வயதிற்கு ஏற்றாற்போல நிறைய நன்மைகள் ஏற்படும். பணவரவுகள் உண்டாகும். நெருப்பு, கட்டடம், பூமி சார்ந்த தொழிலை செய்வோருக்கு நல்ல லாபங்களும், வளர்ச்சியும் உண்டாகும். பெண்கள் சார்ந்த வழியில் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் விலகும். சோஷியல் மீடியாக்களில் புகழ்பெறும் யோகம் உண்டாகும்.


Click it and Unblock the Notifications
