பண வரவு அதிகரிக்கும்.. வீடு, நிலம் வாங்கும் யோகம்.. மீனம் ராசிக்கான செப்டம்பர் மாத பலன்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

september-matha-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-in-this-month

துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு அவ்வளவாக நல்ல நிலைமை இல்லை. ஜென்ம சனியால் பாதிப்படைந்து வருகின்றனர். மிகுந்த மனச் சோர்வில் இருப்பீர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு இப்போது நல்ல நிலைமை ஏற்படும்.

குரு புதன் பார்வை

ஜென்மச்சனியின் ஆதிக்கம் குறைவாக இருப்பதால் பிரச்சனைகளைத் தாங்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும். குரு புதன் பார்வையில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். சமீபத்தில் பழக்கவழக்கங்கள், தொடர்புக்கு அடிமையானவர்கள் எல்லோரும் மனம் திருந்தக்கூடிய மாதமாக இருக்கும். உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ளும் மாதமாக இருக்கும்.

கவனம்

ஆண்களால் பெண்களுக்கு ஏமாற்றமும், பெண்களால் ஆண்களால் ஏமாற்றமும் ஏற்படும். காதவ் அமைப்புகளில் பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்காது. 8 இல் சுக்கிரன் இருப்பதால் ஏமாற்றம் நிச்சயம் ஏற்படும். இளம் வயது பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம். காதல் வாழ்க்கை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமாக இருப்பது நன்மை பயக்கும்.

வருமானம் பெருகும்

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகழ் கிடைக்கும். நல்ல வருமானங்கள் உண்டாகும். அறிவை உபயோகப்படுத்தி செய்யக்கூடிய தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்லவை கண்டிப்பாக நடக்கும். சொத்து சேரக்கூடிய யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம், இடம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும்.

முன்னேற்றம்

மீன ராசி பெரியவர்களுக்கு சங்கடங்கள் எதுவும் இருக்காது. இரண்டாவது சுற்று செயல்படுவதால் லாபங்கள் ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும். வெற்றிகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குடும்பத்துக்கு, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வீர்கள். வயதுக்கு ஏற்றாற்போல நல்ல பலன்கள் கிடைக்கும் மாதம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+