நீசபங்க ராஜயோகம் பெறும் சிம்ம ராசி.. தொழில், பணவரவில் வரும் பிரகாசமான மாற்றம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

september-matha-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-in-this-month

சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். சிம்மம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு மாதத்தின் முதல் பகுதி முழுவதும் ராசியிலேயே இருக்கிறார். அதன் பிறகு, ராசிக்கு 2 ஆம் இடத்திற்கு வருகிறார். எல்லா விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். கெளரவத்திற்கு எந்த பாதிப்பும் வராது. மனக் கலங்கள் இருந்து கொண்டே இருக்கும். அஷ்டமத்தின் சனியின் தாக்கம் பூரத்திற்கு இருந்து கொண்டே இருக்கும்.

பணவரவு

மாதத்தின் முதல் 15 நாட்கள் ஆவணி மாதமாக இருப்பதாலும், ராசிநாதன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். வியாபார முன்னேற்றம் ஏற்படும். திரும்ப வராமல் இருந்த கடன்கள் திரும்பி வரக்கூடிய அமைப்பு ஏற்படும். பணத்தை வைத்து சமாளிக்கும் நல்ல தன்மைகள் ஏற்படும்.

நீசபங்க ராஜயோகம்

2 ஆம் இடத்தில் 7 ஆம் தேதிக்குப் பிறகு உச்ச புதனாக இருந்து, 3 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கிறார். 12 ஆம் இடத்தில் செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தில் இருப்பது எல்லாவற்றிலும் நிதானத்தையம், நல்ல தன்மையும் ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மற்றவர்கள் உதவக்கூடிய சூழல் ஏற்படும்.

பிரச்சனைகள் நீங்கும்

வெளிநாடு, வெளிமாநிலத்தில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் வேலையில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். விசா தொடர்பான பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். தேவையில்லாத மன குழப்பங்கள் எல்லாம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கும். பயண ரீதியான அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மனநிம்மதி

இந்த மாதம் முழுவதும் 4 முதல் 5 பயணங்கள் ஏற்படும். அதன் மூலம் நல்ல மன நிம்மதி, ஆறுதல் கிடைக்கும். சகோதரர்களால் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு விரயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். லாபம், பணவரவு அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+