விருச்சிகம் ராசிக்கு சுக்கிரன் உச்சம்.. விபரீத ராஜயோகத்தால் நினைத்தது நடக்கும் நேரம்.. என்ஜாய்
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் உண்டாகக்கூடிய அற்புதமான காலகட்டம். ராசிநாதன் 6க்கு உரியவனாகி 8 இல் இருக்கிறார். செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இருப்பதால் எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். உச்ச குருவோடு சேர்ந்து 9 ஆம் இடத்தில் நீசபங்க ராஜயோகத்துடன் இருக்கிறார். மாதம் முழுவதும் உச்சகுரு வலிமையான அமைப்பில் உங்கள் ராசியைப் பார்க்கிறது. 11 ஆம் இடத்தில் வெற்றியைத் தரக்கூடிய லாபதிபதியான புதன் உச்சம் அடைகிறார். 12 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவது என அடுத்தடுத்து நல்ல கிரக அமைப்புகள் உண்டாகும்.
யோகம்
விடுதலை பிறக்கும் காலகட்டமாக இருக்கும். சமீபகாலத்தில் பெரிய கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டிருக்காது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஷ்டமசனி, ஜென்மசனி அமைப்புகளில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். கடுமையான சோதனைகளை அனுபவித்திருப்பீர்கள். இனி உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கெளரவம், அந்தஸ்து கிடைக்கும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். வேலை, தொழில் அற்புதமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
குடும்பம் அமையும். பிரிந்து போகிற நிலைமையில் இருந்த குடும்பத்தினர் சேரக்கூடிய யோகம் உண்டாகும். சோர்ந்து போயிருந்த நிலைமையில் இருந்தவர்கள் இனி தன்னம்பிக்கை பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்தில் செலவு அதிகமாக இருக்கும். வருமானம் அற்புதமாக இருக்கும். கையிருப்பு பணம் இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவது, சிலருக்கு வீடு வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். ஃப்ரிட்ஜ், ஏசி, குழந்தைகளுக்கான செலவுகள் என ஏதாவது சுப செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.
சுக்கிரன் அருள்
12 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். தைரியமாக எல்லாவற்றையும் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். நல்ல விஷயங்களுக்கு கடன் வாங்குவது, சுபச் செலவுகள் செய்வது என அற்புதமான மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்டும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
நிம்மதி
குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் தீர்ந்து இனி நிம்மதி பெற்க்கூடிய அமைப்பு ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். பணவரவு, வருமானம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
