செப்டம்பர் மாத ராசி பலன் 2023.. வக்ரமடையும் குரு பகவான்... லட்சுமி குபேர யோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகங்கள் தேடி வரப்போகிறது. சனி, குரு, சுக்கிரன், புதன் என நான்கு கிரகங்கள் வக்ரமடைந்து பயணம் செய்கின்றன. சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்யும் சூரியன், புதனுடன் பயணம் செய்வார். கிரக மாற்றங்களினால் யாருக்கு லட்சுமி குபேர யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் குரு, ராகு, கடகத்தில் சுக்கிரன், சிம்ம ராசியில் சூரியன், புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி பகவான் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்களின் வக்ர நிலையில் பலருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாரெல்லாம் துன்பத்தை தொலைத்து இன்பத்தில் திளைக்கப்போகிறார்கள் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்: ராசியில் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டில் கேது என சஞ்சாரம் உள்ளது. புதன் சூரியன் சேர்க்கை அற்புதத்தை ஏற்படுத்த போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். புது வீடு குடி போக கிரகப்பிரவேசம் செய்ய இது நல்ல மாதம். பூமி தொடர்பான விசயங்கள் வெற்றிகரமாக முடியும். சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படலாம். புதாத்திய யோகம் கைகூடி வரப்போகிறது. போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்தினருடன் இணைந்து இன்ப சுற்றுலா செல்வீர்கள். ராசியில் ராகு ஏழாம் வீட்டில் கேது என பயணம் செய்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் உடல் ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் இந்த மாதம் நோய் பாதிப்புகள் நீங்க வாய்ப்பு உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சூரியன், புதன் மீது குரு பார்வை படுவதால் புத்திரபாக்கியம் கைகூடி வரும். நல்ல செய்தி தேடி வரும் மாதமாகும்.
ரிஷபம்: சனி பத்தாம் வீட்டில் வக்ரமடைந்திருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பிட்காயின்,பங்குச்சந்தை போன்றவைகளில் முதலீடு செய்து பணத்தை இழக்காதீர்கள். குரு 12ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவாகிவிடும். புதன் வக்ரமடைந்தாலும் கவலையில்லை. நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கை கூடி வரும். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். பெண்கள் வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு வாங்க முயற்சி செய்யலாம். பண்டிகை காலங்கள் வருவதால் வீடு பராமரிப்பு செய்யவும் ஏற்ற காலம். ராகு 12ஆம்இடம் கேது 6ஆம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். உற்சாகம் கூடும். தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கு ஏற்ற மாதம். பிடித்த கல்லூரியில் நினைத்ததை படிக்கலாம்.
பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். உங்களை நீங்களே அழகுப்படுத்திக்கொள்ள அதிக பொருட்களை வாங்குவீர்கள். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
மிதுனம்: சனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களைத் தருவார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் வேண்டாம். முயற்சி செய்யும் சிலருக்கு புது வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் எந்த மாற்றமும் இல்லை. குரு பார்வையில் ராசி நாதன் புதன் அமர்ந்திருப்பது சிறப்பு. வக்ரமடைந்த குரு மீது சனியின் பார்வை கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வேலைக்காக புதிய முயற்சிகளை செய்யலாம். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த காரியத்தையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொழில் ரீதியாக செய்யும் முதலீடுகள் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பணம் தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்: செப்டம்பர் மாதத்தில் எந்த விதமான தடைகளும் இன்றி காரிய வெற்றி உண்டாகும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான மாதம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழில் மூலம் ஆதாயம் காண்பார்கள். சுப காரியங்கள் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் கைகூடி வரும். பெண்களுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். கணவரின் ஆதரவும் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வீடு வாங்கவும் புது வீடு மாறவும் நல்ல காலம். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் புதனோடு இணைந்து புதாத்திய யோகம் பெறுகிறார். மாணவர்களுக்கு சிறப்பான மாதம். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க நல்ல நேரம். சின்னச் சின்ன உடல் நலத்தொந்தரவுகள் வந்து போகும். உணவு விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். நேரம் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. உங்கள் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் உடம்பும் மனதும் உற்சாகமாக இருக்கும் மாதமாக அமைந்துள்ளது.
சிம்மம்: உங்கள் ராசியில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் கூடவே புதன் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்ற புதன், மூன்றாம் வீட்டில் கேது, 6ல் சனி வக்ரம், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் ராகு, செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆட்சி பெற்ற கிரகங்களினால் உங்களின் பலம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கைகூடும். தொழில் வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், அதிகார பதவி கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் வாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வருமானம் உயரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகமாக வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களின் எதிர்கால செலவுகளுக்குப் பயன்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பெண்களுக்கு சாதகமான மாதம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம் உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளதால் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். படித்து முடித்து நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.
கன்னி: செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இடமாற்றங்கள் ஏற்படும். ராசிநாதன் புதன் 12ஆம் வீட்டில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். புதாத்திய யோகம் கிடைத்துள்ளது. செவ்வாய் பகவான் ராசியில் பயணம் செய்வதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நல்ல வேலையில் இருப்பவர்கள் இதே வேலையில் தொடருங்கள் புதிய வேலை மாற்றத்திற்கு முயற்சிகள் வேண்டாம். குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. புத்திரபாக்கியம் கை கூடி வரப்போகிறது. தடைகளைத் தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல மாதம் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
துலாம்: செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவினால் மனகுழப்பங்கள் வந்து நீங்கும். வேலையில் பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இந்த மாதம் பொறுமையும் நிதானமும் அவசியம். குடும்பத்தில் கார சார விவாதங்கள் வந்து செல்லும். வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள் எனவே உங்களுடைய வாழ்க்கை துணையின் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
விருச்சிகம்: செப்டம்பர் மாதத்தில் ராசி நாதன் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. ராசிநாதன் பத்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று புதனுடன் பயணம் செய்வதால் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் வருமானம் வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். காதல் இனிக்கும் உறவினர்கள் ஆசியுடன் திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு இது அற்புதமான மாதம். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு இது சாதகமான மாதம். கடன் பிரச்சினை குறையும். பெண்களுக்கு பொன்நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிவர்த்தி அடையும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடி வரும் மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமாக இருக்கிறது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண சுபகாரியம் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் நிதானமாக இருப்பது அவசியம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல காலம் கை கூடி வருகிறது. இல்லத்தரசிகள் நிதானம் தேவை. சமையல் அறையிலோ, வேலை செய்யும் இடத்திலோ விழிப்புணர்வு அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற கோபத்தை குறைக்கவும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.
மகரம்: அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. எதற்காகவும் கவலைப்படாதீர்கள். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மன தைரியத்தை அதிகரித்துக்கொள்வீர்கள். ஏழரை சனி காலமாக உள்ளது. குரு பகவான் நான்காம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். பயணங்கள் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் திடீர் பணத்தேவை ஏற்படும். சமூகத்தில் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குருவின் பார்வையால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய பதவிகள் வந்து சேரும்.
கும்பம்: செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் உங்கள் பயணங்களில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
களத்திர ஸ்தானத்தில் உள்ள புதனுடன் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. ராசியில் உள்ள சனிபகவான் ஏழாவது வீட்டினை பார்ப்பது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சில நேரங்களில் போர்க்களமாக இருக்கும். கோபமான பேச்சுக்களைக் கட்டுப்படுத்தவும். குருபகவான் மூன்றாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம செய்கிறார். பண விவகாரங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம். புது வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள். வேலையில் பளு அதிகரிக்கும். இருக்கிற வேலையை கவனமாக செய்வது நல்லது. தொழிலில் புதிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரை சனி கொடுக்கும் படிப்பினைகளை ஏற்க தயாராகுங்கள். புது வண்டி வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். அதே நேரத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு இது நல்ல மாதம், வெளியூர் சென்று படிக்கத் தயாராவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் அவசியம். இந்த மாதம் அதிக விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.
மீனம்: செப்டம்பர் மாதத்தில் உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் குரு ராகு உடன் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் சூரியன், புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாவது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. மாணவர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும். உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். குருவின் ஆதரவு குடும்பத்தில் குதூகலத்தைத் தரும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும். நிறைய பண வரவு வரும். செப்டம்பர் மாதத்தில் குரு வக்ரம், சனி வக்ரம், புதன், சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். கிரகங்கள் சாதகமாகவே உள்ளன. வேலை விசயத்தில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம். செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் தேவையின்றி வாக்கு தர வேண்டாம். தேவையில்லா விசயத்தை பேச வேண்டாம். இல்லத்தரசிகளிடையே பொறுப்புகள் அதிகரிக்கும். ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது கவனம் தேவை. மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாட்டிற்கு சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications