Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாத ராசி பலன்கள் 2020: இந்த 4 ராசிக்காரர்களுக்கும் காசு மேல காசு வந்து கொட்டும்

செப்டம்பர் மாதம் கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் சூரியன் சிம்மம் ராசியில் பாதி நாட்களும் கன்னி ராசியில் 15 தினமும் சஞ்சரிப்பார். சூரியனுடன் புதன் கூட்டணி இந்த மாதமும் நீடிக்கிறது. இதனால் புத ஆதிபத்ய யோகமும் உண்டாகிறது. சுக்கிரன் செவ்வாய் பார்வை கிடைக்கிறது. ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் கூட்டணிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் மேஷ ராசியில் உள்ள செவ்வாய் வக்ரமடைகிறார். தனுசு ராசியில் உள்ள குரு பகவான் வக்ரம் முடிகிறது. 16ஆம் தேதியன்று சூரியன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு ரிஷபம் ராசிக்கும் கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் எல்லா ராஜ கிரகங்களும் அற்புதமாக இருக்கிறது. நிறைய நன்மைகள் நடைக்கப் போகிறது. நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்க ராசிக்கு சூரியன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் எதையும் தெளிவாக முடிவெடுக்கலாம். நான்கில் சுக்கிரன் நிறைய சுகத்தை அனுபவிக்க வைப்பார். வண்டி வாகனம் வாங்கலாம். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒன்பதில் குரு வக்ர நிவர்த்தி அடைந்து வலுவாக இருப்பார். சனியும் ஆட்சி பெற்று வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். வேலையில் உற்சாகம் ஏற்படும். ஆறுக்கு உடைய புதன் ஆறில் உச்சமடைவது சிறப்பு. புதிய வேலையும் நிறைய சம்பளத்தை தேடித்தருவார் புதன். இந்த மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற போகிறது. உங்களுக்கு இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும் செவ்வாய் வக்ரமடைவதால் கோபம் வரும் கட்டுப்படுத்துங்கள். ராகு இரண்டாம் வீட்டிற்கு வருவதால் நிறைய பணவரவு வரும். செய்யும் தொழிலில் லாபம் கொட்டிக்கொடுக்கும். இந்த மாதம் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நிறைய மாற்றங்கள் நடைபெறக்கூடிய மாதமாக உள்ளதால் செப்டம்பர் மாதம் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. தடைகள் நீங்கும் கஷ்டங்கள் முடிவுக்கு வரும். மூன்றாம் வீட்டிற்கு சுக்கிரன் வருகிறார். உங்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. நன்மைகள் அதிகம் நடக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு போகிறார். ஐந்தில் புதன் ஏற்கனவே ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. கல்வியில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். சுக்கிரன், சூரியன், புதன், சனி, ஆசிய கிரகங்கள் நிறைய நன்மைகளைத் தரப்போகின்றன. ராகு ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை மாறலாமா? தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பீர்கள். செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருந்து வக்ரமடைகிறார். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க மருத்துவ செலவுகள் வரும் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு கிரகங்களைப் பார்த்தால் சூரியன் ஐந்து மட்டும் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசி நாதன் புதன் நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 2ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் குடும்பம் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். நான்காம் வீட்டில் புதன் உச்சமடைந்திருப்பது சிறப்பு. இதுநாள் வரை உங்க ராசியில் ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு போகிறார். இதுநாள் வரை இருந்த மனக்குழப்பம் இனி நீங்கும். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வரும் உங்களுக்கு குருவின் பார்வையால் பிரச்சினைகள் நீங்கும். இந்த மாதத்தில் வேலையை விடலாம் என்று நினைக்காதீங்க. ராகு, குரு நன்மை செய்தாலும் சனி தடைகளை ஏற்படுத்துவார். 11ஆம் வீட்டு அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வீடு மாற்றம் நிகழலாம். சிலர் புது வீடு வாங்கலாம். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் எளிதில் சரியாகும். புதன் உச்சமடைவதால் மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உயர்கல்வி யோகம் வரும் படிக்க நினைத்த கல்லூரியில் உங்களுக்கு பிடிக்க இடம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன சலசலப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க. பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க.

கடகம்

கடகம்

ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். வெளிநாடு யோகம் வரும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்க ராசியில் சுக்கிரன் அமர்வதால் பொலிவு அதிகரிக்கும். நல்ல உணவு சாப்பிடுவீர்கள். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். சூரியன் 2ல் சஞ்சரிப்பதால் உங்க பேச்சில் கவனமாக இருங்க. உங்க வாக்கு பலிதமாகும். கோபப்பட்டு பேச வேண்டாம். புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்கிறார். புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். ஆறாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். விபரீத ராஜயோகம். ஏழுக்குடைய சனி ஏழில் இருந்து ராசிக்கு வந்துள்ள சுக்கிரனை பார்ப்பதால் திருமண வாழ்க்கை கை கூடி வரும் நல்ல செய்தி தேடி வரும் உங்க வசீகரம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமண முயற்சி செய்யலாம். விவாக பிராப்தம் தேடி வரும். செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் நல்ல வேலைகள் தேடி வரும். வீடு மனை வாங்கி விற்கும் வகையில் லாபம் வரும். எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் தடங்கள் இன்றி நடைபெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+