செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. மேஷ ராசிக்கு அள்ளிக்கொடுக்கப்போகும் புதாத்திய யோகம்..ஜாக்பாட்தான்!
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அற்புதங்கள் நிகழப்போகிறது. சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு பயணம் செய்கிறார். செவ்வாய் 2ஆம் வீட்டில் பயணம் செய்வது நல்ல இடம். ராசியில் ராகு ஏழாம் வீட்டில் கேது என சஞ்சாரம் உள்ளது. சுக்கிரன் சூரியன் சேர்க்கை அற்புதத்தை ஏற்படுத்த போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். புதன் ஆறாம் வீட்டில் உச்சமடைந்து வக்ரமடைகிறார். இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இருக்கும் வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் விட்டு விடலாம்.

வீண் விரைய செலவு
சனி பத்தாம் வீட்டில் வக்ரமடைந்திருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பிட்காயின்,பங்குச்சந்தை போன்றவைகளில் முதலீடு செய்து பணத்தை இழக்காதீர்கள். குரு 12ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவாகிவிடும்.

குடும்பம் குதூகலம்
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். புது வீடு குடி போக கிரகப்பிரவேசம் செய்ய இது நல்ல மாதம். பூமி தொடர்பான விசயங்கள் வெற்றிகரமாக முடியும். சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படலாம். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது வேலைப்பளு அதிகமாகும். அதுவே மன உளைச்சலை ஏற்படுத்தும்.

காதல் கைகூடும்
காதல் விவகாரங்கள் வெற்றிகரமாக முடியும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து செல்வீர்கள். திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப்பதால் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். பெண்களுக்கு சுப விரையம் அதிகமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும்.

புதாத்திய யோகம்
மாணவர்களுக்கு 6ஆம் வீட்டில் புதன் உச்சம் பெற்று பயணம் செய்வது சாதகம். மாத பிற்பகுதியில் புதாத்திய யோகம் கைகூடி வரப்போகிறது. போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்தினருடன் இணைந்து இன்ப சுற்றுலா செல்வீர்கள். ராசியில் ராகு ஏழாம் வீட்டில் கேது என பயணம் செய்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் உடல் ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் இந்த மாதம் நோய் பாதிப்புகள் நீங்க வாய்ப்பு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications