Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாதத்தில் சனி,குரு,புதன் வக்ர சஞ்சாரம்..யாருக்கு அதிர்ஷ்டம்..திடீர் ஜாக்பாட் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதத்தில் ராஜ கிரகங்கள் என அழைக்கப்படும் மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து பயணம் செய்கின்றன. புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று வக்ரமடைகிறார். மகர ராசியில் சனி ஆட்சி பெற்று வக்ரமடைந்து பயணம் செய்கிறார். குரு பகவான் தனது ஆட்சி வீடான மீன ராசியில் வக்ரம் பெற்று பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் வக்ர சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும் திடீர் கௌரவ பதவிகளும் தேடி வரும். மாணவர்கள் பெரியவர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்தினருடன் இணைந்து இன்ப சுற்றுலா செல்வீர்கள். இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷபம்:

புதன் உச்சம் பெற்று வக்ரமடைந்தாலும் கவலையில்லை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் பெறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கை கூடி வரும். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களிடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். எனவே விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. திருமண சுப காரியம் தொடர்பாக வரன் பார்க்கத் தொடங்கலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேகமாக பேசி பிரச்சினைகளை இழுத்து போட்டுக்கொள்ளாதீர்கள். மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் கவனமாக இருங்கள். நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் போது கவனமும் நிதானமும் தேவை.

 கடகம்

கடகம்

குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். குடும்பத்தில் அன்பான சொந்தங்களுக்கு இடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே சில சச்சரவுகள் அதிகரிக்கும் கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகள் வரும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் வரலாம்.

சிம்மம்

சிம்மம்

குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். பொருளாதார ரீதியாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும், எனவே இந்த மாதம் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், இந்த நேரத்தில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சூரியனின் தாக்கம் உங்கள் பேச்சில் எதிர்மறையை ஏற்படுத்தும். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். பணியிடத்திலோ உங்கள் வார்த்தைகளால் நீங்கள் ஒருவரை காயப்படுத்தலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கைகூடி வரும். கலைத்துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

கன்னி:

கன்னி:

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சில இடையூறுகள் வந்து செல்லும்.
கோபம் அதிகரிக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அன்றாடம் தியானம் செய்வது அவசியம். மாணவர்களின் மனம் படிப்பில் இருந்து திசை மாற வாய்ப்புள்ளது கவனம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சில பாதிப்புகள் வந்து நீங்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படும். குருவின் அருளால் கொடுத்த கடன் வசூலாகும்.

துலாம்

துலாம்


தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம் செய்யும் முதலீட்டிற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம் மாத கடைசியில் திடீர் ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்:

விருச்சிகம்:

குரு மற்றும் சனியின் அருளால், உங்கள் குடும்ப வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அமைதி நிறைந்திருக்கும். ஏழாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் உங்கள் பத்தாம் வீட்டில் சூரிய பகவானுடன் சேர்ந்து இருப்பதும் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனக்கசப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உறவினர்களுடன் மென்மையான போக்கினை கையாளவும்.

 தனுசு

தனுசு

கிரகங்களின் வக்ர சஞ்சாரத்தினால் குடும்பத்தில் சில குழப்பங்கள் வந்து நீங்கும் ஐந்தாம் வீட்டில் ராகு இருப்பது உங்கள் காதல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். ஏழாம் வீட்டின் அதிபதியான புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் அமர்ந்திருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். சனி பகவானின் சஞ்சாரத்தால் பண வருமானம் அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் தங்கள் கல்வியில் கடினமாக உழைக்க வேண்டும். கவனச்சிதறலை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

மகரம்:

திடீர் பண வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணமெல்லாம் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பாக்ய ஸ்தானத்தில் புதன் வக்ரமடைகிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது நிதானம் தேவை. பண முதலீடு தொடர்பான விசயங்களில் முதலீடு செய்யும் முன்பாக அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலமான மாதம். நிதி நிலை நன்றாக இருக்கும். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். குரு பகவான் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். காதல் விசயங்கள் உற்சாகத்தை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சளி, காய்ச்சல் தொந்தரவுகள் ஏற்படலாம்.

மீனம்

மீனம்

செப்டம்பர் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். ராசியில் குரு வக்ரம், லாப ஸ்தானத்தில் சனி வக்ரம், ஏழாம் வீட்டில் புதன் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். கிரகங்கள் சாதகமாகவே உள்ளன. வேலை விசயத்தில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். செவ்வாயின் பார்வை பத்தாவது வீட்டிற்கு கிடைப்பதால் வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம். பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். மாணவர்கள் இந்த கால கட்டத்தில் பெரியவர்களின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+