“இனி உங்க நேரம்”.. கும்பம் ராசிக்கு செப்டம்பரில் சொந்த தொழில் தொடங்கும் யோகம்
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் கும்பம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.
மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் செவ்வாய், குரு பகவான் இருவரும் சேர்ந்து 6 ஆம் இடத்தில் சேர்க்கை பெறுகிறார்கள். அதனால், 20 ஆம் தேதி வரை என்ன கஷ்டப்பட்டாலும் உங்களுக்கான வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வேலைக்கு அப்ளை செய்தவர்கள் பொறுமையாக காத்திருப்பது நல்லது. ராசியில் ராகு இருப்பதால் எதிர்பாலினத்தவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், இந்த விஷயங்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
சொந்த தொழில்
மனைவி சம்பந்தப்பட்ட, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேசாமல் இருப்பது நல்லது. 3, 10க்கு உடைய செவ்வாய் விபரீத ராஜயோகம் அடையவுள்ளார். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். 6க்கு உடையவன் ஆட்சி பெறுவதால் நீங்கள் நினைத்த தொழிலை தொடங்குவீர்கள். 5, 8க்கு உரிய யோகாதிபதி புதன் 9 ஆம் இடத்துக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி வருகிறார். ஐவிஎப், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இந்த நாள் அற்புதமான பாக்கியத்தைக் கொடுக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, முதலீடு விஷயங்களில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
புதன்கிழமைகளில் சுக்கிர ஓரையில் ஹோம் ஸ்ரீ நமஹ என வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சூரியன் 7க்கு உடையவர் 8 இல் மறைவதால் வீட்டில் மனைவியிடம் நிம்மதி இல்லாத நிலைமை ஏற்படும். சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அரசைப் பற்றி விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சத். நாராயண பூஜை செய்வது நன்மை.
ஜெயம்
சனி பகவான் வக்கிரம் பெறுகிறார், குரு உச்சம் பெறுகிறார். தொழில் ரீதியாக எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவி அந்நியோன்யமாக இருக்க வேண்டும். வைரம் அணிவது நல்லது. சில்வர் கலர் நிற ஆடைகள் நல்லது. குங்குமம் வைப்பது நன்மை பயக்கும். லட்சுமி கடாட்சத்துடன் தொழிலை வைத்துக் கொள்வது நல்லது. ஸ்ரீ சுத்த ஹோமம் செய்வது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
