மேஷ ராசிக்கு செப்டம்பர் மாதம் இப்படியா?.. சொத்து சேரும்.. இந்த விஷயத்தில் மட்டும் உஷார்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-rasi-palan-mesham-rasi-people-will-get-property-gains-financial-growth

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் கன்னி ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடந் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்கு கிடைக்கும பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்

செப்டம்பர் 3 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் உச்சமாகிறார். 18 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் போகிறார். 20 ஆம் தேதி செவ்வாய் கடகத்தில் நீச்சமாகிறார். ஏற்கனவே அங்கு குரு உச்சமாகியுள்ளதால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். இஎம்ஐ போடுவது, கடன் வாங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சொத்து சேரும் யோகம்

கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது. பெரிய லோன்கள் வாங்குவோர் இப்போதைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி, குருவுடன் இணைவதால் சொத்துக்கள் சேரும் யோகம் உண்டாகும். கோர்ட்டில் பிரச்சனையில் உள்ள சொத்துகள், பாகப் பிரிவினை போன்றவை நீங்கி உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்.

பூமி லாபம்

பூமி லாபம் கிடைக்கும். எதிர்பாராதவிதமாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துகள மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். செப்டம்பர் 20 ஆம் தேதி முருகப் பெருமான் வழிபாடு செய்வது, முருகப் பெருமானுக்கு உகந்த மந்திரங்களை ஜெபிப்பது நன்மை பயக்கும். 18 ஆம் தேதி சூரிய பகவான் கன்னிக்கு செல்வதால் சூரியனார் கோயிலில் வழிபாடு செய்வது, சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சை பெறுவோர் 18 ஆம் தேதிக்கு முன்பு செய்து கொள்வது நல்லது.

ஆரோக்கியத்தில் மேன்மை

லாபமும், மகிழ்ச்சியும் இந்த செப்டம்பர் மாதத்தில் இரட்டிப்பாகும். வக்கீல் தொழில் செய்வோருக்கு அபரிமிதமான லாபங்கள், அனுகூலங்கள் உண்டாகும். திறமையை வெளிக் கொண்டு வரும் காலகட்டமாக இருக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். நீண்ட நாட்களாக நோய் பாதிப்பில் அவதிப்பட்டோருக்கு அதில் இருந்து பூரண குணம் பெறுவீர்கள். மாங்கல்ய பலம் கூடும்.

குடும்பம்

2, 7க்கு உரிய சுக்கிர பகவான் நீச்சமாக இருந்த நிலையில், தற்போது 7 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் காதல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். வெளிநாட்டு சம்பந்தங்கள் கிடைக்கும். ஓம் சுக்கிராய நமஹ என்ற மந்திரத்தை சொல்லி வருவது சகலவித முன்னேற்றத்தைத் தரும். அஷ்வ பூஜை செய்வது நன்மையைத் தரும். 16, 17, 18 ஆம் தேதிகளில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் இருப்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+