துலாம் ராசியினரே.. செப்டம்பரில் கைநிறைய பணம் வரும்.. சொத்து சேர்க்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-rasi-palan-thulam-rasi-people-will-get-property-gains-financial-growth

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு அரசு உதவிகள் பெறுவதாக இருந்தால் அவை இந்த மாதத்தில் கிடைக்காது. அதேபோல, அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு தள்ளிப்போகும். சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளார். துலாம் ராசியினருக்கு எதிரி சூரியன். தலைமைப் பதவி உங்களுக்கு கிடைக்காது. நீங்களே ஒரு சொந்த தொழில் செய்தால் மட்டுமே தலைமைப் பதவி இருக்குமே தவிர, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. விமர்சகர் பதவிக்கான அங்கீகாரம் கிடைக்காது.

பணவரவு

2க்கு உடைய செவ்வாய் நீசபங்கம் ராஜயோகம் பெறுவதால் பண மழை கொட்டும். ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு உச்சம் பெற்றிருக்கிறார். இவை இரண்டும் இணைந்து இந்த மாதத்தில் பயணிப்பார்கள். கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நன்மையைத் தரும். வீடு கட்டுவது, இடம் வாங்குவது நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும்.

தொழில்

செப்டம்பர் 24 ஆம் தேதியை தவறவிடக் கூடாது. புதன் பகவான் ராசியில் அமர்ந்திருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆன்டிக் பொருட்கள், விலையுயர்ந்த பொருள்களை விற்பனை செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், கேஸ்டிங் செய்பவர்களுக்கு யோகம் உண்டு.

பரிகாரம்

அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உணவு விற்பனை செய்வோருக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் தரத்திற்கு கீழான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பக்குவப்பட்ட மன நிலைமைக்கு வருவது நல்லது. செவ்வாய்க்கு உரிய சத்ரு ஹோமம் செய்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+