தனுசு ராசியை வெச்சு செய்யப் போகும் செவ்வாய்.. குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்.. ஆபத்தும் வருது
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விசேஷமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியைப் பொருத்தவரையில் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் நீச்சமாக இருந்திருந்தார். இதனால் குழந்தைகள் பிடிவாத குணத்துடன் செயல்பட்டிருந்திருப்பார்கள். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு குழந்தைகளே காரணமாக இருந்திருப்பார்கள். நிம்மதி இல்லாத தூக்கம் இருந்திருக்கும். தற்போது செவ்வாய் 9 ஆம் இடத்துக்கு வந்திருப்பதால் ஒரு விதத்தில் விடுதலையையும். இன்னொரு விதத்தில் செலவையும் கொடுக்கும்.
செலவுகள் அதிகரிக்கும்
தந்தை வழியில் செலவுகள், தந்தை ஆரோக்கியத்தில் செலவுகள், இளைய சகோதரர்கள் வகையில் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தங்கையின் திருமணச் செலவுகள் என வந்து கொண்டே இருக்கும். உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் இருந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் தம்பி, தங்கைக்கு உங்களுடைய உதவி தேவைப்படும். ஒன்றரை மாதத்துக்கு குரு பகவானின் அருள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆரோக்கியம்
சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து பார்வையை கொடுப்பதால் செவ்வாய் செய்யக்கூடிய செயல்பாடுகளுக்கு அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வின் மூலம் செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து தொப்புள் வரையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்து செயல்படுவது நல்லது.
பயணம்
சுக்கிரன் ராசிக்கு 6 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆவதால் அநாவசியமான பொல்லாப்பை ஏற்படுத்தி செலவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாயும் 12 ஆம் இடத்தைப் பார்க்கிறார், சுக்கிரனும் 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை விஷயங்கள், பதவி உயர்வு தொடர்பான விஷயங்களுக்காக கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அலைச்சல்
நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். குருவும், சனியும் சாதகமாக செயல்படுவார்கள். தனுசு ராசிக்கு சனி பகவான் எதிரியாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுப்பார்கள். ஜூன் 6 முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை அலைச்சல்கள் ஏற்படும் மாதமாக இருக்கும். வெளிநாட்டுக்குச் செல்வது, இந்தியா வருவது, மீண்டும் வெளிநாடு செல்வது போன்றவை உண்டாகும்.
பொறுமை அவசியம்
அப்பா வழி சொத்து சம்பந்தமான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பது அதற்கான வழக்குச் செலவு போன்றவை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டாகும். எதிரிகள் சார்ந்த தொல்லைகள் அதிகரிக்கும். ஜூலை 26 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன், உங்கள் சப்தம ஸ்தானத்துக்கு வந்து குருவுடன் இணைவதால் நண்பர்களால் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதுவரைக்கும் பொறுமையாக இருப்பது நல்லது.
வீண் விரையம்
தந்தை வழி உறவுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சூழல் இருப்பதால் உங்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாய், தந்தை ஆரோக்கியத்தில் செலவுகள் ஏற்படும். தந்தை வழி சொத்துகளாலும் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை சம்பந்தமாக வெளியூருக்குச் சென்றால் செலவு ஏற்படாது. உள்ளூரில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். எந்த இடத்திலும் உங்களுக்கு மரியாதை குறைய வாய்ப்பிருக்காது. மூத்த சகோதரர் உதவிகரமாக செயல்படுவார்.












Click it and Unblock the Notifications