கன்னிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. கட்டில் விஷயத்தில் பிரச்சனை.. ரொம்ப கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களுடைய ராசிக்கு 3, 8 க்கு உரியவர் எதிரி, அஷ்டமாதிபதி 12 ஆம் இடத்துக்கு வருகிறார். நீச்ச ஸ்தானத்தில் இருந்து வந்ததால் மூத்த சகோதரர் வகையில் தேவையில்லாத கெளரவ குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும். மனஸ்தாபங்கள், வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கும். இப்போது செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்துக்கு வருவதால் கட்டில் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை உண்டாகும். கணவன், மனைவி உறவு மட்டுமல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்காது. தூக்கத்தை கெடுக்கும் மாதமாக இருக்கும்.
எதிரிகளால் தூக்கம் கெடாது. 8 ஆம் வீட்டு அதிபதி அஷ்டமாதிபதி மறைவது மிகவும் நல்ல விஷயம்தான். கடல் கடந்த பயணங்கள் தடைபடுவதற்கான வாய்ப்புள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் வழக்கு சார்ந்த விஷயங்கள் எதிரிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் உங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நிலம் சார்ந்த விஷயங்கள், உடன் பிறப்பு சார்ந்த விஷயங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
ஜூன் 6 முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை ராசியிலேயே செவ்வாய் இருப்பதால், அதாவது ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். ஜூலை 28க்குள் உங்கள் ராசிக்குள் செவ்வாய் வரும்போது பலவிதமான பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். உங்களுடைய பதற்றம், முன்கோபம் தேவையில்லாத விமர்சனங்களையும், சண்டை, சச்சரவுகளையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் மாதம் கடைசி வரை சாதகமற்ற சூழ்நிலை உள்ளது. 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலே தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்கு, எதிரிகள், ஆரோக்கியம் சார்ந்த செலவும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வழக்கில் கட்டாயம் செலவு ஏற்படும். இளைய சகோதரர்களால் மன அழுத்தம், வருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடன்பிறப்புகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இருப்பது நல்லது.
தாயாருடன் எந்தவித பாதிப்பும் இல்லை. தாயின் வளர்ச்சி, ஆலோசனையால் ஆதாயம், நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த மாதத்தில் ராசிநாதனாகிய புதன் தசம, லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எந்த பாதிப்புகள் வந்தாலும் நீங்கள் நிதானத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு பெரிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications