மகர ராசிக்கு பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.. சகோதரர்களுடன் மோதல், பகை வரும் வாய்ப்பு.. ரொம்ப கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விசேஷமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி மகர ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் கெளரவத்தை விட்டுக் கொடுத்து, சுயமாரியாதையை விட்டு செயல்பட்டிருப்பீர்கள். தற்போகு செவ்வாய் பகவான் 8 ஆம் இடத்துக்குப் போவதால் ஒருவிதத்தில் நற்பலன்களையும், குடும்பம் சார்ந்த விஷயங்களில் சில விமர்சனங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. கத்திப் பேசுவது, சண்டை போடும் சூழல் ஏற்படும். எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
இழப்பு
உங்களிடம் வரம்பு மீறி செயல்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். 4 ஆம் வீட்டு அதிபதியான செவ்வாய் 7 ஆம் இடத்தில் சுக ஸ்தானதிபதி நீச்சமாக இருந்ததால் வீடு, மனை சார்ந்த விஷயங்களில் தோல்வியையைும், இழுபறியையும் சந்தித்திருப்பீர்கள். தற்போது செவ்வாய் 8 ஆம் இடத்துக்குச் சென்று 2 ஆம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இழப்பைப் பற்றி பேசி சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், எதிரிகளைப் பற்றிய உண்மைத் தன்மையை அறிந்து அவர்களை கையாளும் முறையைக் கற்றுக் கொள்வீர்கள்.
மோதல்
லாப ஸ்தானத்தை தனது சொந்த வீட்டை செவ்வாய் பார்க்கிறார். இதனால் கஷ்டப்பட்டாவது உங்கள் கெளரவத்தைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். மூத்த சகோதரர்களுடன் மோதல் போக்கு, பகை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. ஜூன் 6 முதல் ஜூலை 28 ஆம் தேதி வரைக்கும் மூத்த சகோதர, சகோதரிகளுடன் கருத்து மோதல் ஏற்படும்.
வருமானம் அதிகரிக்கும்
சனி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திலும், குரு ராசிக்கு 6 ஆம் இடத்திலும் இருப்பதால் வளர்ச்சியையும், தொழில் வெற்றியைத் தரும். முதலீடுகளுக்கு உண்டான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு 10, 12 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் முதலீடுகள் மூலம் வருமானம் உண்டாகும். அந்த வருமானத்தில் அதிகார வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பணத்தைப் பெறுவதற்கான சூழல் உருவாகும். எதிரிகள் சார்ந்த விஷயங்களில் உங்கள் லாபம் உண்டாகும்.
கவனம்
மற்ற ராசிகளைக் காட்டிலும் உங்களுக்கு சங்கடங்கள் குறைவாகவே ஏற்படும். மிதுனம், விருச்சிகம், துலாம் ராசியைக் காட்டிலும் சுமாரான பலனே கிடைக்கும். அதாவது அதிர்ஷ்டம் கொட்டவும் செய்யாது, பணத்திற்குப் பஞ்சமும் இருக்காது என்ற நடுநிலைமையில் இருப்பீர்கள்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications