மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் செவ்வாய் கிரகம்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு 11 ஆம் வீட்டின் அதிபதி, 6 ஆம் வீட்டு அதிபதியான செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குப் போயிருக்கிறார். உங்களுடைய பேச்சு தான் உங்களுக்கு பிரச்சனையாகி இருக்கும். குடும்பம், பேச்சு, பணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்திருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் ஓரளவுக்கு நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
வெற்றி
மூன்றாம் இடத்துக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆகியிருக்கிறார் என்பதால் உங்களுக்கு வெற்றியைத் தரும். 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாதம் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, வேலை சார்ந்த வெற்றி, தொழில் சார்ந்த வெற்றிகள் என அனைத்துவிதமான வெற்றிகளும் கிடைக்கும்.
குடும்பம்
தசம ஸ்தானத்தில் சனி இருக்கிறா், ராசியில் குரு இருக்கிறார். நண்பர்கள், சக ஊழியர்களின் உதவியைக் கொண்டு உங்களுக்கு அனுகூல பலன்கள் ஏற்படும். இளைய சகோதரர்களை திருத்துவதற்குண்டான வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய வாழ்க்கைத் துணையின் பெற்றோர் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.
எடுத்த காரியத்தில் வெற்றி
கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கம். உங்கள் கெளரவத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்கள், கலைத் துறையினர், தொழில் துறையினருக்கு ஏற்றம் தரும் காலமாக இருக்கம். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். இந்த மாதத்தைப் பொருத்தவரை அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.
ஜெயம்
செவ்வாய் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராசியில் இருக்கம் குரு பகவான் உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார். அதற்கு மருத்துவ ரீதியான பாதுகாப்பை செவ்வாய் தருவார். திருமண வயதுடையவர்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் கடன் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.
கடன்
கடன் அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை. கடன் அதிகரித்தாலும் வெற்றிகள் பல கிடைக்கும். வீடு, மனம், வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்க கடன் வாங்கினால் தவறு கிடையாது. வீட்டில் திருமண வயதில் இருக்கும் சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்காகவும் நீங்கள் கடன் வாங்கலாம். மொத்தத்தில் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி அற்புதமான பெயர்ச்சியாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications