சிம்ம ராசியினரே முன்கோபத்தை தவிர்த்தே ஆகணும்.. வாயை திறந்தால் இனி பிரச்சனைதான்.. ரொம்ப கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 12 ஆம் இடத்தில் இருந்த செவ்வாய் உங்கள் ராசிக்குள் வருகிறார். பதட்டம், முன்கோபத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். பதற்றம், முன்கோபம் அதிகரிக்கும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணை, சக ஊழியர்களிடம் எரிந்து விழும் சூழல் உருவாகும். உடல் அசெளகரியம், சாப்பாடு தொடர்பான அசெளகரியம் உண்டாகும்.
முதலீடுகள், வெற்றி
நிலம் சார்ந்த முதலீடுகள் அனைத்தும் வெற்றியைத் தரும். அப்பாவின் சொத்துகள் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய சுய முயற்சியின் மூலம் சொத்து சேர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டம சனி நடந்தாலும் 4 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் சொத்து வாங்குவதற்கான சரியாக நேரமாக இருக்கும். சனி 2 ஆம் இடத்தை பார்ப்பதால் பணக் கஷ்டத்தைக் கொடுப்பார். பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது, விரிவுபடுத்துவது, செப்பனிட முயற்சிப்பது நன்மையை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
இல்லையெனில் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். வயிறு தொடர்பான பிரச்சனையை செவ்வாய் பார்க்கிறார். அடிவயிறு சார்ந்த இடத்தை 5 ஆம் இடத்தை சனி பார்க்கிறார். இதனால், அடிவயிறு, மேல்வயிறு, அசிடிட்டி, அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புளளதால் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் தலையில் அமர்ந்திருப்பதால் தலை சூடாவதற்கான வாய்ப்பும், வார்த்தையில் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
கோபம்
நீங்களே உறவுகளை விலக்கி வைத்து அவர்களை எதிரிகளாக மாற்றும் வாய்ப்புள்ளதால் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அலுவல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அலுவலகங்களில் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்போது நீங்கள் தேவையில்லாத சில விமர்சனங்களை முன்வைத்து தேவையில்லாத கெட்ட பெயர்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
குடும்பம் சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முடிந்த வரைக்கும் இயலாமையை கோபமாக வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. ராசிக்குள் கேது, செவ்வாய் இருப்பதால் நீங்கள் எதைப் பேசினாலும் பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஜூன் 6 முதல் 22 ஆம் தேதி வரை பிரச்சனை இல்லை. அதன் பிறகு வார்த்தை விரையங்களால் செலவுகளாலும், பாதிப்பும் ஏற்படாது.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications