Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு புது வீடு, புது கார்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்கு செவ்வாய் பகவான் மூன்றாம் அதிபதி. தைரிய, வீரியத்தைக் கொடுக்கக் கூடியவர். தொழில் ஸ்தானத்தின் அதிபதி. செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான மகர மனையில் உச்ச பலத்தோடு அமர்ந்திருக்கிறார். 12 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் பார்வையாக 3 ஆம் இடத்தைப் பார்க்கிறார். முயற்சிகள் அனைத்தும் வலிமை பெறும். திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதில் வெற்றி பெறும் யோகமும் உண்டு.
தைரியத்தோடும், வீரியத்தோடும் செயல்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். உற்சாகமாக, தைரியமாக, துணிச்சலோடு செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். ஆவணங்களில் கையொப்பமிடுவீர்கள். மற்றவர்களுக்கு உத்திரவாதம் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தூரதேசப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
சந்தேகம் வேண்டாம்
விற்பனை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கன்சல்டன்சி, கமிஷன் சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ் துறை நன்றாக இருக்கும். விற்பனையாகாத நிலங்கள் அனைத்தும் விற்பனையாகும். பிப்ரவரி 23 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். விற்பனை, ஒப்பந்தம், ரெஜிஸ்டிரேஷன், பயணங்கள் ஆகியவை நன்றாக இருக்கும்.
கலைத் துறையில் இருக்கும் கும்ப ராசியினருக்கு வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், வேலை மாற்றம் நன்றாக இருக்கும். உடனிருப்பவர்களை சந்தேகப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். ஒப்பந்தம், வியாபாரம், கையெழுத்தில் கவனம் தேவை. 10 ஆம் அதிபதி உச்சமாக இருப்பதால் முதலீடுகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் தோன்றும்.
முதலீடுகள்
முதலீடுகள் செய்வது, கிளையை ஆரம்பிப்பது, எதிர்காலத்திற்காக திட்டமிடுவது போன்ற எண்ணங்கள் தோன்றும். 10க்கு உரியவர் 12 இல் இருப்பதால் வெளிநாட்டில் சென்று முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிமாவட்டத்தில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டும். ஏற்றமதி, இறக்குமதி, வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். இங்கிருந்து கொண்டே வெளிநாட்டில் வேலை செய்யக்கூடிய யோகம் உள்ளது.
வரும் 28 ஆம் தேதி வரை செவ்வாய் உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது, கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்குள் சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களை கோபப்படுத்துவது போன்ற விஷயங்கள் நடந்தாலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களின் தலையீடு உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கவனம்
அரசு, அரசு சார்ந்த விஷயங்கள், நிர்வாக மேலாண்மை, பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உள்ளது. கூடுதல் பொறுப்புகள், வேலைப் பளு ஏற்படும் வாய்ப்புள்ளது. செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பயணிக்கும்போது, கடன் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செலவு விஷயங்களில் கவனம் தேவை. மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். சகோதரர் விஷயத்தில் மனசஞ்சலங்கள் ஏற்படும். எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும்போது செவ்வாய் அதிகம வலிமையைப் பெறுவார். நிலம் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். நிலம், இடம், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications