Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magaram Rasi Palan: மகர ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

sevvai-peyarchi-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-during-this-period

மகரம் ராசி பலன்

மகர ராசியில் செவ்வாய் பகவான் உச்சம் பெற்றுள்ளது. உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் 4க்கு உரியவர். சுகத்தைக் கொடுக்கக் கூடியவர். வீடு, வண்டி, வாகனத்தை தரக்கூடியவர். 11 ஆம் அதிபதி லாபம், மனமகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர். இந்த காலகட்டத்தில் சுகபோகங்களை அள்ளித் தரக்கூடிய அமைப்பு உள்ளது. சுகம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் காலகட்டமாக இருக்கும்.

வீடு, நிலம் வாங்கும் யோகம்

நிலத்தின் மீது உங்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும். வீடு, நிலம் வாங்க வேண்டும் என்கிற உறுதியான முடிவைக் கொடுக்கும் நேரம். அந்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த இடத்தை தேர்வு செய்யும் யோகம் உண்டாகும். வீடு, தோட்டம், விவசாயப் பகுதிகள், இடத்தில் வீடு, குடோன் போன்றவை கட்டி அதன் மூலம் வருமானம் பெறும் யோகம் உண்டு.

திட்டமிட்டு முடிவுகளை எடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உள்ளது. சுக்கிரனும் ராசியில் அமர்ந்துள்ளதால் ஆசைப்பட்ட வாகனத்தை வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் புதிய கார் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. சுகத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

லாபம் கொட்டும்

லாபத்தை தரக்கூடியவர் செவ்வாய். தொழில், வியாபாரம், வேலையில் இருப்பவர்கள் பணத்தை சேமிப்பதற்குண்டான காலகட்டமாக இருக்கும். ஆசைப்பட்ட மாதிரி செலவு செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் அனுபவிப்பதற்கு, விரும்பிய பொருள்களை வாங்குவதற்கும் இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.

தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும் உணர்வைக் கொடுக்கும். திட்டமிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நேரம். நல்ல நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். நிலம் சார்ந்த, இடம் சார்ந்த விஷயத்தில் அனுகூலம் கிடைக்கும். இடம், வீடு, நிலம் வாங்குவது, தொழிலை மாற்றிக் கொள்வது, தொழிலில் மாற்றங்கள் செய்வது, வாடகை வருமானம் கிடைப்பதற்கு, இடமாற்றம் செய்வதற்கு உகந்த காலகட்டம் இது. 100க்கு 95 சதவீதம் அனுகூலம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

கவனம்

செவ்வாய் வரும் 28 ஆம் தேதி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அதிகாரம், ஆளுமை தன்மை கிடைக்கும். திடீர் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசு விஷயத்தில், ஆவணங்கள் விஷயத்தை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தகுதிக்கேற்ப கடன்களை வாங்க வேண்டும். இரவு நேரத்தில் வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தந்தையுடன் கருத்து, வேறுபாடுகள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது, நிறைய பயணங்கள் ஏற்படும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் மூலம் அனுகூலம் கிடைக்கும். தாய் ரீதியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமணம் சார்ந்த சுபகாரியங்கள் நடக்கும். நல்ல விஷயங்களைச் செய்யும் தன்மை உண்டாகும்.

கோபம் வேண்டாம்

பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நிச்சயமாக சுகங்கள் பெருகும். நல்ல லாபங்கள் கிடைக்கும். கோபம், ஆக்ரோஷத்தை தவிர்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். எந்த விஷயத்தை செய்தாலும் யோசித்து நிதானமாகச் செயல்படுவது நல்லது. நல்ல செய்திகளைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+