Meenam: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மீனம் ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 2 ஆம் அதிபதி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் அதிபதி. பாக்கியத்தை தரக்கூடிய செவ்வாய் உச்ச பலம் பெற்றிருக்கிறது. குடும்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இருவருக்குள்ளும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
தன ஸ்தானத்தின் அதிபதியான செவ்வாய் உச்ச பலம் பெற்றிருக்கிறது. லாப ஸ்தானத்தில் செவ்வாய் வலிமையாக உள்ளதால் பொருளாதாரம் சிறப்பு பெறும். பொருளாதாரத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாது. எந்த வகையிலாவது பணம் உங்கள் கையில் வந்து சேரும். பணம், பொருள் சிறப்படையக்கூடிய காலமாக இருக்கும். கோபம், ஆக்ரோஷத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
பாக்கியங்கள் கிடைக்கும்
தன பாக்கியம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எந்தவித பாக்கியம் வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த பாக்கியங்கள் அமையக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. தூர தேச பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், கடல் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். அரசின் மூலமாக மாற்றங்கள் வரும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
அதிகாரம், ஆளுமை தரக்கூடிய விஷயங்கள் சிறப்பு பெறும். அரசியலில் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். தந்தையின் மூலமாக அனுகூலம், ஆதாயம் கிடைக்கும். அரசு வேலை, அரசாங்கத் தேர்வுகள் எழுத வேண்டும் போன்ற எண்ணங்கள் தோன்றும். சந்திரனுடைய நட்சத்திரத்தில் 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது குழந்தைகளைப் பற்றிய எண்ணங்கள் அதிகமாக இருக்கும். குழந்தைகள் நலன், குழந்தை பாக்கியம், குழந்தை பிறப்பு போன்றவை சிறப்பு பெறும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக காரியங்களை செய்வீர்கள். சொத்துகளைப் பற்றிய பிரச்சனைகள், பிரச்சனைகளைத் தீர்ப்பது , தாய் வர்க்கம் ரீதியான செயல்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் தனம், பொருளாதாரம், பாக்கியம் சிறப்பு பெறும்.
வீடு, வண்டி, வாகனங்கள், அசையும், அசையா பொருள்கள் சேர்க்கும் யோகம் உண்டாகும். விவசாய நிலங்கள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களை தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்கள், கட்டடம் சம்பந்தப்பட்ட, நெருப்பு சம்பந்தப்பட்ட, ஃபாஸ்ட் ஃபுட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.
நற்பலன்கள்
சகோதரர்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். சீருடை அணிந்து பணியாற்றிக் கொடுக்கக்கூடியவர்களுக்கு நல்ல அமைப்பு உள்ளது. மருத்துவத்துக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருளாதாரம், பாக்கியம் ஏற்படும். பெயர், புகழ் கிடைக்கும். தான் யார் என்று காமிக்கும் அமைப்பு ஏற்படும். பூர்வ புண்ணியத்தின் பலன் கிடைக்கும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். இடம், நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications