Sevvai Peyarchi: மேஷ ராசியினருக்கு 35 நாட்களில் நடக்கப்போகும் மாற்றம்.. காத்திருக்கும் குட்நியூஸ்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் உச்சமடைவதால் அதிகாரம், ஆளுமைத் திறன் நன்றாக இருக்கும். கடந்த சில மாதங்களாக சனியின் 10 ஆம் பார்வையில் செவ்வாய் இருந்ததால் தேவையில்லாத அசிங்கம், அவமானம், கோபம் ஏற்பட்டிருக்கும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி வந்த சூழல் அனைத்தும் மாறும். துணிச்சலோடு செயல்படுவீர்கள். தைரியம், வீரியம் அதிகரிக்கும்.
யோகம்
எந்தவிதமான சவால்கள் வந்தாலும் அதனை சமாளித்து வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். தன்னம்பிக்கை பெருகக்கூடிய காலகட்டமாக இருக்கும். கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக விலகும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள், ஆரோக்கியப் பிரச்சனைகள் அனைத்தும் மாறும். ராசிநாதன் தற்போது பலப்படுவதால் நினைத்தது நடக்கும்.
குழந்தை பாக்கியம்
நினைத்த காரியங்களை செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. சகோதர உறவுகளால் நல்ல பல அனுகூலங்கள், மேன்மைகள் கிடைக்கும். வரும் 28 ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கப் போகிறார். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.
வெற்றி மேல் வெற்றி
பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சகோதரர் பிரச்சனை, சொத்து பிரச்சனை, பாகப் பிரச்சனை போன்றவை சரிசெய்யப்படும். தாமதமாகி வந்த அரசாங்க காரியங்களை இந்த காலகட்டத்தில் செய்தால் அதில் 100 சதவீதம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அரசாங்க வேலை கிடைக்க சாதகமான காலகட்டமாக இருக்கும்.
அரசு வேலை
5 ஆம் இடத்து அதிபதியான சூரிய பகவான் 10 ஆம் இடத்தில் வலிமையாக அமருவதால் அரசு, அரசு சார்ந்த விஷயங்கள், அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். பதவி உயர்வு தேடி வரும். இடமாற்றம் உண்டாகும். எதிர்மறையாக இருந்து வந்த கருத்துகள் எல்லாம் தவிடு பொடியாகும். ஆளுமை மையத்துடன் இணைந்து செயல்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கோபம் வேண்டாம்
கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் யோகம் உண்டு. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை செவ்வாய் திருவோண நட்சத்திரத்தில் பயணிக்கும்போது சந்திர மங்கள யோகம் கிடைக்கும். மங்களகரமான விஷயங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் உண்டாகும். தாய் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
இடம் வாங்கும் யோகம்
இடம், நிலம், வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் வெற்றி ஏற்படும். சுகபோகங்களை பெருக்கிக் கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதே செவ்வாய் பகவான் தனது சொந்த நட்சத்திரமான அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது நிலம் சார்ந்த விஷயங்களில் நல்லது நடக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. வாழ்க்கையே மாறப்போகுது -
Rasi Palan This Week: மகர ராசி பிரச்னைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. இனி சிங்கப் பாதை தான் -
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொழிலில் அற்புதமான முன்னேற்றம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications