Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sevvai Peyarchi: சிம்ம ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் செவ்வாய்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

sevvai-peyarchi-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-during-this-period

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 4க்கு உரியவர். சுக ஸ்தானத்தைக் குறிப்பவர். வீடு, வண்டி, வாகனம் அமைத்து தரக்கூடியவர் செவ்வாய் பகவான். அதேநேரம் பாக்கியத்தைக் கொடுக்க கூடியவர். செவ்வாய் 6 ஆம் இடத்தில் உச்சபலத்தோடு வலிமையாக இருந்து பலனளிக்கப் போகிறார். சிம்ம ராசிக்கு ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம்.

ப்ரோமேஷன் கன்ஃபார்ம்

தைரியம், வீரியமாக, தெம்பாக வேலை செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலை இல்லாத சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும். அதிகாரம், ஆளுமை, மாற்றங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, வேலை உயர்வு கிடைக்கும். 6 ஆம் இடம் என்பது கடனைக் குறிக்கக்கூடிய கிரகம். சொத்துகளை சேர்ப்பதற்கு உகந்த நேரமாக இருக்கும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

வீடு, இடம், விவசாய நிலம் வாங்குவதற்கு யோகமான காலகட்டமாக இருக்கும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நிலம் சார்ந்த விஷயத்தில் எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளும் உங்களுக்கு யோகமுண்டு. கேட்கின்ற இடங்களில் உங்களுக்கு கடன் கிடைக்கும். கடன் மூலமாக சொத்து சேர்க்கும் யோகமும் உண்டாகும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி, வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும்.

குழந்தை பாக்கியம்

4 ஆம் பார்வையாக 9 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். எந்த பாக்கியத்துக்காக இதுவரை காத்திருக்கிறீர்களோ அந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை காரக கிரகமான குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால் குழந்தை வரவு கட்டாயம் உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வியாபாரம், தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் மூலமாக ஆதாயங்கள் உண்டாகும்.

வெற்றிகள்

வரும் 28 ம் தேதி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் பணிக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் நல்ல நல்ல பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக அனுகூலம், ஆதாயம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி கிடைக்கும். அரசு வேலைகள், அரசுப் பணிகள், அரசுத் தேர்வுகள் தொடர்பான எண்ணங்கள் தோன்றும். அதிகாரம், விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்படும். நினைத்த விஷயங்களில் உறுதியாக முடிவுகளை எடுப்பீர்கள்.

விரயம்

தகப்பன் சொத்துகள், தகப்பன் சார்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கும். மின்சாரம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது, வேலைப் பளு அதிகரிக்கும். வேலை அழுத்தம், மன அழுத்தம் ஏற்படும். தாய், தந்தையின் உடல்நலனைப் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய விரயங்கள் ஏற்படும் என்பதால் அதனை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+