Sevvai Peyarchi: அடித்தாடும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் செவ்வாய்.. என்ஜாய்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனான செவ்வாய் வலுக்கப் போகிறார். கடன், நோய், பகை, எதிர்ப்பைக் கொடுக்கக் கூடியவரும் அவரே. செவ்வாய் 3 ஆம் ஸ்தானத்தில் இருப்பதால் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். முயற்சிகள், தைரியம், வீரியம் அதிகரிக்கும். எதையும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் அதிகரிக்கும். திடீரென முடிவெடுப்பீர்கள்.
புத்திசாலித்தனம்
எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். ஏற்கனவே வியாபாரம் செய்பவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். வியாபாரத்திற்கு உண்டான செயல் திட்டங்களை மேற்கொள்வீர்கள். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிறைய பயணங்கள் செய்ய வேண்டியதிருக்கும். அதன் மூலம் நல்லவை நடக்கும். சகோதர ஸ்தானம் வலுப்பெறும்.
அனுகூலம்
நல்லது நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். செவ்வாய் 6 ஆம் அதிபதியாகவும் வருவதால் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். உங்களுடைய தகுதிக்கு மேல் கடன் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உணவு, உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அக்கறையாக இருப்பது நல்லது. நிறைய இடத்தில் எதிர்ப்பு, பகை இருக்கும். யார் உங்களுக்கு துரோகம், எதிராக செயல்படுகிறார்கள் என்பவற்றை கண்டறிவீர்கள்.
தொழில்
6 ஆம் இடம் என்பது வேலையை குறிக்கக்கூடிய இடம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தொடர்பாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். செவ்வாய் உத்திராடம் நட்சத்திரத்தில் வரும் 28 ஆம் தேதி வரை பயணிப்பதால் தொழிலைப் பற்றிய சிந்தனைகள், செயல்பாடுகள், தொழிலை மாற்றுவது, தொழிலில் மாற்றம் செய்வது போன்ற எண்ணங்கள் ஏற்படும். தொழிலுக்காக கடன் வாங்குவீர்கள். தொழிலால் நல்ல புகழைப் பெறுவீர்கள்.
பாக்கியங்கள்
நிறைய பேர் பெயர், புகழைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்க வேலைகளுக்கு தேர்வு எழுதுவீர்கள். அதிகாரம், தந்தையால் ஆதாயம், தந்தை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். 29 ம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிப்பதால் பாக்கியங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம், தன பாக்கியம், வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் போன்றவை உண்டாகும். ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். குழம்பித் தெளிவாகும் மனநிலை ஏற்படும்.
வீடு வாங்கும் யோகம்
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பயணங்கள் ஏற்படும். பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது இன்னும் பலப்படுவார். உங்களை உயர்த்திக் கொள்வதற்கு இந்த காலகட்டம் அற்புதமானதாக இருக்கும். உங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றுவீர்கள். வீடு, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நல்ல சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications