செவ்வாய் பெயர்ச்சி 2025: மூன்று ராசிகளுக்கு லக்கி ஜாக்பாட்.. உங்க வாழ்க்கையே மாறப்போகுது
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள், நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். வீரம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவற்றுக்கு காரணியாகத் திகழ்ந்து வருகிறார். செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டாலே உலகளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் உலகளவில் செல்வாக்கை நிலைநிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். விருச்சிக ராசியில் 10 ஆம் இடத்திற்கு செவ்வாய் வருவதால் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதில், பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில தேவையற்ற செலவுகளையும் ஏற்படுத்தும்.
ஜூன் 7 ஆம் தேதி செவ்வாய் சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியில் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகின்றன. எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிட்டப் போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
குழந்தை தொடர்பான விஷயங்களில் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி, வரன் தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளத்துடன் அமையும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் விஷயங்களில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
துலாம்
வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். புதிய வேலையைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான வேலைகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம்
வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை வணிகத்தில் லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். பணியிடத்தில் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை புகழ் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications