ஏழரை சனியை துரத்தும் சனி ஜெயந்தி.. நாளை இந்த வழிபாட்டை மிஸ் பண்ணிடாதீங்க
சனி ஜெயந்தி 2025: கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்தவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு சனி பகவான் வல்லமை படைத்தவர். வைகாசி அமாவாசையான நாளை சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நன்நாளில் சனி பகவானை வழிபடுவதால் சனி தோசம், ஏழரை சனி தாக்கம் குறையும். இதற்கான வழிபாட்டு முறையை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.
கிரகங்களில் சனி பகவான் அமைப்பு மிகவும் முக்கியமானது. சனி பகவான் மட்டும் தான் ஒரு ராசியில் 2.5 வருடங்கள் ஆட்சி செய்வார். புரணாங்கள் படி வைகாசி மாதம் அமாவாசை தினம் சனி பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. அதன்படி வைகாசி அமாவாசையான நாளை (27.5.2025) சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சனி ஜெயந்தி
இதனை சனி அமாவசை என்றும் அழைப்பார்கள். இந்த புனித தினத்தில் சனி பகவானை வழிபடுவதால் மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள் விலகும் என்பது நம்பிக்கை. வேத ஜோதிடத்தின் படி நமக்கான கர்ம பலன்களை, அதாவது நல்லது, கெட்டதுகளை வழங்குவதில் சனி பகவானின் பங்கு முக்கியமானதாகும்.
ஏழரை சனி
சனி பகவானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கல்வி, உத்யோகம், தொழில் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள். அதுவே சனி பகவானால் பாதிக்கப்படும் ராசிகளுக்கு உடல் ஆரோக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகளவு பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். அதனால் தான் சனிப்பெயர்ச்சியை உலகமே உற்று கவனிக்கிறது.
பொதுவாக ஏழரை சனிக்கு பயப்படாதவர்க குறைவு. அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசை கட்டி வாட்டி வதைக்கும். ஆனால் அவர்களுக்கு கூட இந்த சனி ஜெயந்தி நல்ல பலன்களை கொடுக்கும். அதனால் சனி ஜெயந்தியில் சனி பகவானை வழிபட்டு, சனி தோசம்,ஏழரை சனியின் நெருக்கடிகளில் இருந்து வெளிவரலாம்.
சனி ஜெயந்தி வழிபடுவது எப்படி
வைகாசி அமாவாசை என்பது மே 26 ஆம் தேதி நண்பகல் 12.11 மணிக்கு தொடங்கி, 27 ஆம் தேதி இரவு 8.31 மணிக்கு நிறைவடையும். இதன் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை சனி ஜெயந்தி கொண்டாப்படும். எனவே நாளை காலை அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டு அருகே உள்ள அரச மரத்தை வழிபட வேண்டும். மரத்தின் வேர் பகுதிக்கு பால், புனித கங்கை நீர், தண்ணீர் மூலம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு சிறிது நேரம் மரத்தின் அருகில் அமர்ந்து. ஓம்..ஶ்ரீ சனிஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் அடர்ந்து கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இதை எவ்வளவு உச்சரிக்கிறோமோ அவ்வளவு நல்ல பலன்கள் கிடைக்கும்.
சனி ஜெயந்தி தின மாலை அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அந்த விளக்கில் கருப்பு எள் மற்றும் ஒரு ரூபாய் நாணம் வைப்பது அவசியம். இந்த பூஜையின் போது அரச மரத்தை சுற்றி ஏழு முறை வலம் வர வேண்டும். இது சனி தோசம், ஏழரை சனி ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி கிடைக்க பெரியளவுக்கு உதவும்.
இந்த வருடம் பல மங்களகரமான சுப நேரங்கள் சனி ஜெயந்தியில் வருகிறது. அதனால் தடைகள் விலகி நினைத்த காரியங்கள் நிறைவேற, ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி அரச மரத்தை 108 முறை சுற்றி வருவது அருமையான பலன்களையும், அற்புதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
தானம்
சனி ஜெயந்தி தினத்தில் எள், எலுமிச்சை ஊறுகாய், கருப்பு எள், கருப்பு உப்பு, கருப்பு உளுந்து விதை, உளுத்தம் பருப்பு, கருப்பு மிளகு, துணி, கடுகு எண்ணெய் ஆகியவற்றை தானமாக செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications