ஆடியில் ஆரம்பிக்கு சிம்ம ராசியின் ஆட்டம்.. டாப் கியரில் போகும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்
ஆடி மாத ராசி பலன்: ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு, சனி, ராகு, கேதுக்கள் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து வருட பலன்கள் சொல்லப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், குருப்பெயர்ச்சி 12 முதல் 13 மாதங்கள் வரைக்கும் குருவின் நிலையை வைத்தும் கணிக்கப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் நிலையை வைத்து மாதப்பெயர்ச்சி கணிக்கப்படுகிறது.

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் கடக வீட்டில் இருக்கப் போகிறார். கடகத்தோடு சூரியன் சுபத்துவத்தோடு இருக்கும் தன்மை மிகப்பெரிய யோகத்தைத் தரும். சூரியதிசை, சூரிய புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆடி மாதத்தின் நடுப்பகுதியில் அதவாது ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் குரு நீச்சமடைகிறார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய் ரிஷப வீட்டில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் ஆடி மாதம் 3-ஆம் வாரத்தில் சூரியனோடும், குருவோடும் சேரும் அமைப்புள்ளது. அந்த வகையில், ஆடி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த சூரியன் 12 ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். உச்ச குருவுடன் சேர்ந்து சுபத்தன்மையோடு இருப்பது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும். வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இதுவரை ஒரு மாதிரியாக மன அழுத்தத்தில் இருந்த மகம் நட்சத்திரத்தினருக்கு பெரிய மாறுதல்கள் வந்து சேரும்.
தைரியம் அதிகரிக்கும்
பெரிய அளவில் அஷ்டமசனி சோதனைகளை செய்யாது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டமத்து சனியின் பாதிப்புகளைச் சந்தித்து வருவீர்கள். சூரியன் சுபத் தன்மையோடு இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். பெரிய கஷ்ட நஷ்டங்கள் வராத தன்மை ஏற்படும். தைரியமாக எந்த முடிவாக இருந்தாலும் அதனை எடுக்கலாம்.
எதிரிகளை வெல்லும் யோகம்
எதிரிகள் உங்களைப் பார்த்து புறமுதுகிட்டு ஓடக்கூடிய தன்மை ஏற்படும். 11 ஆம் இடத்திற்கு மாறக்கூடிய செவ்வாய் ஒன்றரை மாதம் வரை இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிரிகளை வென்று சாதிப்பீர்கள். நல்ல ஆரோக்கியமாக இருப்பீர்கள். கடன் தொல்லை தீரும். தொழில், வியாபாரம், விவசாயத்தில் லாபம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வுகள் மகம் நட்சத்திரத்தினருக்கு கிடைக்கும்.
தொட்டது துலங்கும்
மனம் நிலைப்படக்கூடிய தன்மை ஏற்படும். வெளிநாடு, வெளிமாநிலம், தூர இடத்தில் இருக்கக்கூடியவர்கள் 12 ஆம் இடத்தில் வலுவாக இருப்பதால் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு யோகம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.












Click it and Unblock the Notifications