Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புது வீடு, நிலம், சொத்துகளை குவிக்க போறீங்க
Simmam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் சிம்மத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுகளிடம் தர்க்கம் செய்வது, வாக்குவாதம் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், பெரியோருக்கு மன வருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். அவர்கள் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். பணத்தை முதலீடு செய்வீர்கள். எதிர்பார்த்த நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
இந்த வாரத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் நன்றாக இருக்கும். முக்கியமான இடத்திற்குச் சென்று வருவீர்கள். எதிர்பாராத நட்பின் மூலமாக நன்மைகள் நடக்கும். புதிய தகவல்கள் வந்து சேரும். சூரியன் பாக்கியத்தில் அமர்ந்திருப்பதால் வீட்டில் பெரியவர்கள் ஒருமாதிரி இருப்பது போல தோன்றும். மக நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம்
பூரம், உத்திரம் நட்சத்தினருக்கு மிகப்பெரிய வெற்றி ஏற்படும். வீட்டில் நிறைய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் நடக்கும். நிறைய பேருக்கு திருமணம் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பய உணர்வுகள் நீங்கும். இருப்பது என்ன பிரச்சனை என்று கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பீர்கள். ராகு அமர்ந்திருக்கும் வரை காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. வெளியூர், வெளியாட்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும்.
தொழில்
தொழிலில் மேன்மை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றிகள் உண்டாகும். மன மாற்றம் ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். எந்த விஷயங்கள் நடக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அந்த விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும். கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்கி வேண்டும். சர்க்கரை தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை பயக்கும். முருகப் பெருமான் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது, படிப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications