Rasi Palan This Week: சிங்கம் மாதிரி ஜம்முனு மாறும் சிம்ம ராசி.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
Simmam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மன அழுத்தம், தொந்தரவு, சில உறவுகளால் தொந்தரவு போன்றவை ஏற்படும். ஆனால், அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். அவர்கள் செய்த நன்மைகளை நினைத்து விட்டுச் செல்வது நல்லது.
பயணங்கள்
பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். அவர்கள் உங்களை நன்றாகப் பார்க்ககூடிய அமைப்பு உள்ளது. வெளிநாடு, வெளியூர், பயணம், ஆன்மீகத் தலங்களுக்கு செல்வது போன்ற யோகம் உண்டு. அனைத்து விஷயங்களிலும் நல்லவை நடக்கும். ஏற்றம் காணப்படும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். நட்பு விஷயத்தில் ஒரு மாதிரி இருந்த அமைப்புகள் எல்லாம் நீங்கும்.
முன்னேற்றம்
கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். தெய்வ பலம் கூடும். நிறைய பாட்டு கேட்கும் அமைப்பு உள்ளது. நண்பர்களுடன் சந்திப்புகள் ஏற்படும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் காணப்படும். பொறுமை, நிதானம், அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளவது நன்மை பயக்கும். சாப்பிடுவதை வெறுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்தவற்றை சாப்பிடுவது நல்லது.
இலக்கு
எந்த விஷயத்தை நீங்கள் குறி வைத்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தைரியமாக பல காரியங்களைச் செய்யும் யோகம் உண்டு. வேலை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில், குடும்ப உறவுகள், தேவையில்லாத பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
உங்களுக்காக இருப்பவர்களுடன் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். அப்பா அம்மாவிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். வெளிநாடு, வெளியூர், பயணங்கல் மேற்வீர்கள். ராஜகணபதி வழிபாடு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications