Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. அற்புதமான யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். சுப காரியத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். மன வருத்தங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக காதல் அமைப்பில், மனைவி விஷயத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அனுகூலம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அடுத்தடுத்து எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கக் கூடிய சாத்தியங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். தொழிலில் புதிய அமைப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். நம்பிக்கை வைத்து ஒரு காரியத்தை செய்வது நன்மையைத் தரும்.
தெய்வ வழிபாடு
பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வருவது நல்லது. உங்களுடைய பலமே தெய்வத்தை வழிபாடு செய்வது என்பதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. விநாயாகர் வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தூக்கமின்மை, தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
சளி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குழப்பங்கள் ஏற்படும், கவனமாக இருப்பது நல்லது. 24 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அதிக உடற்பயிற்சியும் தொந்தரவை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யவே இல்லையெனினும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தகுந்த மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொண்டு மருத்துவர் சொல்வதுபோல உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
கடன் தீரும்
பழைய கடன்கள் தீரும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் ஆரோக்கியமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் நன்றாக இருக்கும். லாபங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications