Rasi Palan This Week: தொழிலில் ஜாக்பாட் அடிக்கும் சிம்ம ராசி.. உறவுகளால் பிரச்சனை காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக ஏற்றம் ஏற்படும். வியாபாரம் ரீதியாக நல்ல லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் கூடும். இழுபறியாக இருக்கக்கூடிய நிலைமைகள் பெரியளவுக்கு அனுகூலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
மனம் விட்டு பேசுங்க
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் உள்ளூர், வெளியூரில் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உள்ளது. தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். எதைப் பற்றியும் சிந்திக்காமல் முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது.
உறவுகளால் பிரச்சனை
இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். செவ்வாயின் நிலை சரியாக இல்லாமல் இருப்பதால் உறவுகளால் தொந்தரவு ஏற்படும் என்பதால் அமைதி காப்பது நல்லது. ஆவேசப்படாமல், கோபப்படாமல் இருப்பது நல்லது. அஷ்டமத்தில் சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. லாபத்தின் அளவு பன்மடங்காக உயரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
வீட்டில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கொஞ்சம் தள்ளியிருப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். தேக ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனைகள், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். 4 ஆம் இடத்தில் இருக்கும் புதன் அறிவு, புத்திசாலித்தனம், சமயோஜித புத்தி போன்றவற்றை கொடுப்பார்.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். மருத்துவமனை பக்கத்தில் வீடு வாங்குவது, மிலிட்டரி குவாட்டர்ஸ் பக்கத்தில் நிலம் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, கடன் முடிவது, புதிய கடன் வாங்குவது போன்ற வாரமாக இருக்கும். ரத்தபந்த உறவுகளிடம் கவனமாக இருப்பது நல்லது. பெரிதாக கவலைப்படும் நிலைமைகள் இல்லை.
வழிபாடு
ராசி லக்னத்திலேயே கேது உள்ளதால் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். நரம்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு, சுப்பிரமணியர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications