Rasi Palan This Week: அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் சிம்ம ராசி.. செலவுகளில் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அனுகூலம் காணப்படும். துணை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக கொஞ்சம் இணக்கமாகச் செல்வது நல்லது. வேலை ஆட்கள் விஷயத்திலும் தேவையில்லாத குழப்பமும், வேலை செய்யும் விஷயத்தில் பதட்டமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். உங்களுடைய முடிவுகள் பலரால் பாராட்டப்படும். உறவினர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்மை தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், கலைத் துறையில் இறங்குவது நன்மையைத் தரும்.
விரயம் ஏற்படும்
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்க கூடாது. விரயங்கள் அதிகமாக காணப்படும். 2027 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை திங்கள்கிழமை தோறும் மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது அனுகூலமும், சந்தோஷத்தையும் கொடுக்கும். வாகன அமைப்பு, தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பு, படிப்பு அமைப்பில் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றிகள் குவியும்
திரிகோணத்தில் கெட்ட கிரகங்கள் இல்லாததால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். குரு லாப ஸ்தானத்தில் வக்கிரமாக இருப்பதால் நட்பின் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும் நிறைய பேருக்கு திருமண யோகம் உண்டாகும். காதல் கைகூடும். பூர்வீக சொத்துக்கள், நிலபுலன்கள் வரும் யோகம் உண்டாகும். எதுவாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் நமக்கு என்கிற எண்ணம் ஏற்படும்.
கலக்கங்கள் நீங்கும்
மன திடம் அதிகரிக்கும். காரியசித்தி ஏற்படும். மனதில் இருந்து வந்த தேவையில்லாத கலக்கங்கள் தீரும். தாயார் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பிபி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சர்க்கரை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் இருக்கும் சனி பகவான் திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
நண்பர்களைத் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பதவிகள் வந்து சேரும் யோகம் உண்டாகும். பல யோகமான விஷயங்கள் நடக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை கேட்பது மேன்மையைத் தரும்.
-
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம்












Click it and Unblock the Notifications