Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் மாற்றம்.. தொழிலில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் எதற்கெடுத்தாலும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு என அனைத்து விஷயங்களிலும் எல்லோரும் உங்களை குறிவைக்கும் நிலை இருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மகிழ்ச்சி
தொழில் சார்ந்த விஷயங்களை மேலதிகாரிகளிடம் பேசி காப்பாற்றிக் கொள்வது நல்லது. நட்பு, காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் அரவணைத்துச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும்.
நட்பில் கவனம்
8 இல் இருக்கும் சனி என்ன செய்யுமோ என்று பயந்து கொண்டிருந்த அமைப்பு மாறும். நண்பர்களுக்குள் வித்தியாசங்கள் காணப்படும். உங்களுடைய நட்பை கெடுப்பதற்கு சிலர் முயற்சி செய்வார்கள். எல்லாவற்றிலும் சிம்ம ராசியினர் பொறுமையாக இருப்பது நல்லது. பொறுமையைக் கடைப்பிடித்தாலே எல்லா விஷயங்களும் உங்களுக்கு கைகொடுக்கும்.
ஆரோக்கியம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். ஆரோக்கியத்தில் படபடப்பு, குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் பிரச்சனை, தலைசுற்றல், கீழ்முதுகு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்
வழிபாடு
சிம்ம ராசியினர் கோளார் பதிகத்தை கேட்பது நன்மையைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு தவறாமல் விளக்கேற்றுவது ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications