Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அடி மேல் அடி.. இந்த காரியங்களை மட்டும் செய்யாதீங்க
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கட்டாயமாக உடற்பயிற்சியை செய்ய வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உதவி செய்பவர்களை கேலி செய்வது, தவறாகப் பேசுவது போன்றவற்றை செய்தால் அஷ்டமத்தில் இருக்கும் சனியால் பாதிப்புகள் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
வார்த்தையில் கவனம்
கனிவான வார்த்தைகளைப் பேசுவது நல்லது. உங்கள் வாழ்க்கையில் நல்லது, கெட்டதுக்கு என நிற்பவர்கள் மீது கோபம், வன்மம் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. சிறிய வாக்குவாதங்கள், கோபங்கள் கூட சூரியன் நீசமாக இருப்பதால் உங்களுக்கு உதவி செய்பவர்களை நீங்கள் உதறித் தள்ளும் சூழ்நிலை ஏற்படும். அதனை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது.
அரவணைப்பு
உங்களுக்கு உதவி செய்பவர்களை அரவணைத்துக் கொள்வது நல்லது. தவறே அவர்கள் மேல் இருந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலில் ஏற்றம், அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.
மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இன்டீரியர் வேலைகளை வீட்டில் செய்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் முதலீடுகளுக்குத் தயாராகிக் கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கால் வலி, முதுகு வலி, ஒற்றை தலைவலி, அலர்ஜி போன்ற விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
உத்தியோகம் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தோஷங்களும் அனுகூலத்தையும், மகிழ்ச்சியையும் தரும். பண வரவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை சந்திக்கும் நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறும் யோகம் ஏற்படும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications