மே மாத பலன் 2026: சிம்மம் ராசிக்கு அதிர்ஷ்ட திருப்பம்.. தொழில், பணவரவில் சூப்பர் முன்னேற்றம்
மே மாத பலன்கள் 2026: சிம்மம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், சிம்மம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் 10 ஆம் இடத்தில் ஏராளமான கிரகங்கள் உள்ளதால் நீங்கள் செய்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். பெரிய பொறுப்புகள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் நல்ல காலகட்டம்.
வீடு வாங்கும் யோகம்
வண்டி, வாகனம் வாங்குவது, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கிரகப் பிரவேஷம் செய்யும் யோகம் உண்டு. நட்பின் மூலமாக சந்தோஷம் ஏற்படும். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். அரசாங்க வேலைகள் கிடைக்கும். மெடிக்கல் சீட் கிடைக்கும். நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
யோக பலன்
சிம்ம ராசியினருக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். கூட இருப்பவர்களை சரியாக வைத்துக் கொண்டால் எல்லா விஷயங்களும் சரியாகும். டிசம்பர் மாதம் வரை விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். எத்தனை பிரச்சனையாக இருந்தாலும் அவை பனிபோல விலகும். யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய பொறுப்புகள் வந்தாலும் அதை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
பணவரவு
பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு bonus அல்லது எதிர்பாராத பணவரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம்.
பெண்கள்
பெரிய அளவில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். 20 ஆம் தேதிக்குப் பிறகு சூப்பரான நேரமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 100க்கு 150 சதவீதம் நன்மைகள் கிடைக்கும் காலகட்டம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications