சிக்கல் மேல் சிக்கலை சந்திக்கும் சிம்ம ராசி.. இந்த வாரத்தில் காத்திருக்கும் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-august-17-to-23

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சூரியன் உங்கள் ராசிக்குள் வரும் மாதமே இந்த ஆவணி மாதம். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக செல்வது நல்லது. வேகமாக செல்வது, செல்போன் பேசிக் கொண்டே இயக்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகம், தொழில், படிப்பு ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பி உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. உங்களுடன் உறுதுணையாக இருக்கும் நபர்களை முழுதாக நம்புவது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவோரிடம் தள்ளியிருப்பது நன்மை பயக்கும்.

கவனம்

அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், முதன்மை அதிகாரிகளுக்கு வேலை போவது, ஆரோக்கியம் கெடுவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அப்பா, மகன், அல்லது உங்களுக்கு தலையில் வெட்டுக்காயம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விரயத்தில் குரு, லாபத்தில் செவ்வாய் இருப்பதால் பணத்திற்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது.

பணவரவு

நண்பர்களால் நல்ல பண வரவு உண்டாகும். நிலம், தங்கத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். உறவுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தன பாக்கியம் உண்டாகும். தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

சிம்ம ராசியினருக்கு விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நரம்பு, கண், முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் ஏற்றத்தைத் தரும். சிதம்பரம் நடராஜர் வழிபாடு சகலவித முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+