சிம்ம ராசியை வெச்சு செய்யப் போகும் ஆவணி மாதம்.. வேலையை விட்டால் திண்டாட்டம் தான்
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களில் 24 வயதை கடந்தவர்கள் எல்லா விஷயங்களில் அதீத கவனம் தேவை வண்டி, வாகனங்களில் செல்லும்போது, உறவுகள் விஷயங்களில், தொழில், வியாபாரம், நண்பர்கள் போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசி தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஆசை வேண்டாம்
ஆசைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா வருடங்களிலும் ஆவணி மாதத்தில் அமைதியாக செல்வது நல்லது. எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கத் தொடங்கும். அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள் இந்த மாதத்தில் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கம், வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அலுவலகத்தில் கவனம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அளவுக்கு கோபம் வருவதற்கான வாய்ப்புள்ளது. இன்னொரு இடத்தில் வேலை கிடைக்கும் வரை நிதானமாக செல்வது நல்லது. மற்றவர்கள் உங்களை உசுப்பேற்றும் வாய்ப்புள்ளதால் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. ஆவணி மாதத்தில் மிகுந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் எல்லா விஷயங்களிலும் பார்த்து செயல்படுவது நல்லது.
முன்னேற்றம்
பிள்ளைகள் விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை, தைரியம் பிறக்கும். துணை மற்றும் உங்கள் காதல் அமைப்பில் அவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படும். கணவன், மனைவி, காதலன், காதலி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.
ஆரோக்கியம், வழிபாடு
அசாதாரண தைரியத்தால் தேவையில்லாத பாதிப்புகளைச் சந்திக்காமல் இருப்பது நல்லது. நிம்மதியாக தூங்குவது மிகவும் அவசியம் ஆகும். நரம்பு, முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது அற்புதமான மேன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications