Simmam Rasi Palan: சிகரத்தில் ஏறப்போகும் சிம்ம ராசி.. கடன் விஷயத்தில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந் திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு சூரிய பகவான் வலிமையாக இருந்தால் எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும். ராசியில் ஏற்கனவே கேது பகவான் அமர்ந்திருக்கிறார். எந்தவொரு வம்பு, வழக்குகளுக்கும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். நவம்பர் மாதம் வரை கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் 6 ஆம் இடத்தில் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் ஏதோ ஒரு கோபம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு காரியத்தை செய்தால் கூட இருப்பவர்கள் அதற்கு எதிராகச் செய்து கொண்டே இருப்பார்கள்.
கடன்
உங்கள் சொந்த விஷயத்தில் கூட மற்றவர்களின், நண்பர்களின் தலையீடு இருக்கும். இதனை ஏற்க மறுத்தாலும் உங்கள் பிரச்சனை ஏற்படும். 6 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. இப்போது வாங்கக்கூடிய கடன் பிற்காலத்தில் கழுத்தை நெறிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தும். கடன் விஷயத்தில் கவனம் தேவை.
கருத்து மாறுபாடு
4, 9 ஆம் இடத்திற்கு அதிபதி செவ்வாய். நெருப்பு, மின்சாரம் தொடர்பான விஷயங்களால் சில பாதிப்புகள் ஏற்படும். அப்பா, சகோதரரோடு கருத்து மாறுபாடு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துகளை விற்பதற்கான முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். ஆனால், அது தொடர்பான முயற்சிகளில் தடை ஏற்பட்டே நிவர்த்தியாகும். சகோதரர்களோடு கருத்து மாறுபாடு ஏற்படும்.
எதிரிகள்
6 இல் சூரியன், செவ்வாய் இருக்கும் இந்த காலகட்டத்தில் சர்வீஸ் துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் பயந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் எதிரிகள் அழியக்கூடிய காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் ராகுவும், புதனும் இருக்கின்றனர். இந்த ராகு புதன் சேர்க்கையால் உங்களைச் சந்திக்க கூடியவர்கள் நிறைய பேசக்கூடிய சூழல் ஏற்படும்.
திருமண யோகம்
7 இல் புதன் இருக்கும்போது குடும்பத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுகள் நடக்கும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு பெரிய எதிர்பார்ப்புகள், ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும். 6 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் இருக்கும்போது சர்க்கரை தொடர்பான பாதிப்பு, உடம்பில் சிறு சிறு பாதிப்பு, நெருப்பு தழும்பு, காயம் ஏற்படும் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
வழிபாடு
11இல் குரு இருப்பதால் நல்ல பண வருமானம் ஏற்படும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வங்கி இருப்பை பார்த்து மன மகிழ்ச்சி அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் யோகம் உண்டாகும். திருப்போரூர் கந்தசுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. பிரச்சனைகள் பறந்துபோகும் நேரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிகம் ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சொத்து விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு அடிக்கும் லாக் ஜாக்பாட்.. எல்லா யோகமும் உங்களுக்கு தான் -
Mesham: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் வரப்போகும் அற்புதமான மாற்றங்கள்.. இதை மட்டும் கடைப்பிடிங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு தொழில், பணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் தான் பிரச்சனையே -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications