சிம்ம ராசிக்கு சிக்கல்கள் தீரப்போகும் காலம்.. மாசி மாதத்தில் மாற்றம் ஏற்படுமா?
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு (Simmam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் சிம்மம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உங்களுடைய நண்பர்களுக்கு, கணவன், மனைவிக்கு நன்றாக இருக்கும். பெரிய பதவிகள், விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து பெரிய புதிய தொழில் ஆரம்பிக்கும் பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். நிறைய மன மகிழ்ச்சி உண்டாகும்.
பிரச்சனைகள் நீங்கும்
தேலையில்லாத பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வாழ்க்கை அற்புதமாக இருக்கும். செவ்வாயும் இப்போது இல்லை என்பதால் வீட்டில் எந்தவித பிரச்சனையும், பாதிப்புகளும் ஏற்படாது. நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நண்பர்களை திருமணம் செய்யும் யோகம், காதலன், காதலியை திருமணம் செய்வதற்கான யோகம் உண்டாகும்.
யோகம்
யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். வெளியிடத்திலும், குடும்பத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
பகை தீரும்
சூரியன், ராகு, புதன், சுக்கிரன், செவ்வாய் இணைவு இருப்பதால் வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படும். பகையாக இருப்பவர்கள் எல்லாம் மாறுவார்கள். பகை அமைப்பில் இருப்பவர்கள் நண்பர்களாக மாறும் யோகம் உண்டு. நிறைய பிரச்சனைகள் சரியாகும். மதிப்பு உருவாகும். இருக்கும் பிரச்சனைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை சரிசெய்வீர்கள்.
முன்னேற்றம்
நல்ல மனமாற்றம் உண்டாகும். பழனிக்குச் சென்று மொட்டை அடித்து வருவது, அல்லது முடி இறக்குவது உங்களுக்கு அற்புதமான யோகத்தை உண்டாக்கும். நல்லவை மட்டும் நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரிய ஆபத்துகள் எதுவும் ஏற்படாது. மாசி மாதம் மாற்றத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். சிவபெருமான், பழனி முருகன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications