Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இடம் வாங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

Simmam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-during-this-week

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)

சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 4 கிரகங்கள் இணைவதால் கண்டிப்பாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். மெடிஷன் படிக்கும் மாணவ, மாணவிகளக்கு அற்புதமான நேரமாக இருக்கும். சிறு சிறு தடைகள் ஏற்படும். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் சூழல் ஏற்படும். அவை எல்லாம் ஒரு மாதத்திற்கு மட்டுமே. அதற்குப் பின்னர் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இடம் வாங்கும் யோகம்

இடம் வாங்குவது, போக்கியத்துக்கு இடத்தை வாங்குவது, போக்கியத்துக்கு வண்டிகள் வாங்குவது, சொந்தமாக வண்டி, வாகனங்கள் வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும். முக்கியமான விஷயங்களை இந்த காலகட்டங்களில் செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். டாக்குமென்டேஷன் தொடர்பான பிரச்சனைகளைப் பேசி விவாதம் செய்து ஜெயிக்கும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்தில் நிம்மதியே இல்லை என்றீர்களோ அந்த விஷயம் இனி அற்புதமாக மாறும்.

மனக்குழப்பம்

நீதிமன்றம், வழக்கு, வம்பு, வழக்கறிஞர்கள், ஆடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வெற்றியைக் குவிக்கும் நல்ல நேரம். மனதில் தேவையில்லாத குழப்பம் நிலவி வரும். இதை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும்.

ஆரோக்கியம்

பெரிய சந்தோஷத்தைப் பார்க்கக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையும். போட்டி போட்டு ஒரு விஷயத்தைச் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். வயிறு, அஜீரணக் கோளாறு, அல்சர், உணவுக் குழாயில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. காரமான உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும்.

கடன் தீரும்

உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை உண்டாகும். செல்வாக்குகள் கூடக்கூடிய காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய கடன்கள் தீரும். தனிப்பட்ட முறையில் வழக்குகளி வெற்றி ஏற்படும். சுபகாரியத் தடைகள் நீங்கும். ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் விநாயாகருக்கும், உக்கிர தெய்வ வழிபாடும் வெற்றியைத் தரும். காது, மூக்கு, தொண்டை கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

சந்தோஷம் ரீதியாக 60 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். அருணாச்சலேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+