Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார ராசி பலன்: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க

Subscribe to Oneindia Tamil

Simmam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-feb-9-to-15

கிரக நிலைகள்

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.

இந்த வார ராசி பலன்

சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)

சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தலையில் அடிபடுவது, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவது, வீட்டில் தீ விபத்து ஏற்படுவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 7 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் இருக்கும்போது நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் வெற்றி ஏற்படும்.

கவனம்

நாம் எதிர்பார்ப்பதை விட பல விஷயங்கள் சாதகமாக முடியும். எதற்காகவும், யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் நடக்கும். நிறைய பேரின் ஆதரவு கிடைக்கும். செவ்வாயுடைய பார்வை கேது மேல் இருப்பதால் முடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டம்

7 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது அதிர்ஷ்டத்தை தரும். நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். முடிந்தளவுக்கு எல்லா விஷயங்களுக்கும் தயாராக இருப்பது நல்லது. உங்களுடைய காலம் மாறக்கூடிய நேரம். நிறைய அதிர்ஷ்டங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியகங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மனம் விட்டுப் பேசுங்க

குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய நண்பர்கள், தோழிகள், நட்பாக இருக்கக்கூடிய உறவுகள், நன்மையை நினைப்பவர்களிடம் தினமும் ஒரு பத்து நிமிடமாவது மனம் விட்டுப் பேசுவது நல்லது. உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்

வழிபாடு

பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், தூக்கத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு, ராகு கேது வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கோளார் பதிகத்தைக் கேட்பது, படிப்பது நல்ல நன்மைகளைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+