Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. வாயில தான் கண்டமே

Subscribe to Oneindia Tamil

Simmam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Simmam Rasi Palan].

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-february-22-t0-march-1

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)

சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. காதல் அமைப்பில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

பேச்சில் கவனம்

மேலதிகாரிகள், முதலாளிகள் என மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் சொல்லைக் கேட்டு பேசினால் பெரிய சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கண்டிப்பாக மன அழுத்தத்தில் கவனம் தேவை. உடல் ரீதியாக இருக்கும் ஒரு விதமான பதட்டம் படிப்படியாகக் காணப்படும். 24 வயதைக் கடந்தவர்கள் 60 வயது வரை உள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

நட்பில் கவனம்

உங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெறும் காலகட்டம். உங்களுக்கு ஆதரவாக வரும் புதிய நபர்கள் உங்களை நடுவில் விட்டு விட்டுச் செல்லும் நிலை உள்ளதால் மிக கவனம் தேவை. திடீர் ஆதரவு பேராபத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த நட்பை சிதைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ரகசியங்களைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

ஆரோக்கியம்

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாகப் பாரத்துக் கொள்ள வேண்டும். கம்யூனிகேஷனால் வரும் பாதிப்பு, மற்றவர்களால் நமக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் தீக்காயங்கள், வெட்டுக் காயங்கள் வருவதற்கான வாய்புள்ளதால் கவனம் தேவை.

வழிபாடு

அதிகமான திருஷ்டி இருந்தால் இதுபோன்றவை நடக்கும். பாசிட்டிவான எண்ணங்கள் இருந்தால் பெரிய பாதிப்புகள் கொடுக்காது. துருப்பிடித்த கத்தி, துருப்பிடித்த விஷயங்களை அகற்றுவது நல்லது. இல்லையெனில் அது நமக்கு எதிராக வேலை செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். சந்தோஷம் 65 சதவீதமும், பொருளாதார ஏற்றண் 70 சதவீதம் நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+