Simmam Rasi Palan: "குறி வச்சா இரை விழும்".. சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது
Simmam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். நரம்பு சம்பந்தப்பட்ட, படபடப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விநாயகர் வழிபாடு யோக பலத்தைப் பெற்றுத் தரும்.
சங்கடங்கள் தீரும்
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் நல்ல அனுகூலம் ஏற்படும். பலவிதமான சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் அடுத்தடுத்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
யோக பலன்கள்
மேலதிகாரிகள் விஷயத்தில் இழுபறியாக இருந்த சிக்கலை தீர்த்துக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். நன்மையும், யோக பலன்களும் கிடைக்கும். உறவுகளுக்குள் இருக்கும் எல்லா காரியமும் ஜெயத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். சிம்ம ராசியினர் வாகனங்களில் மட்டும் விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. அனைத்து ஏற்றங்களும் நம்பிக்கையும் ஏற்படுத்தும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகள் வெற்றி பெறும் யோகம் உண்டு. பெரிய செல்வாக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். இனி அடுத்தடுத்து நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். அண்ணன் தம்பிக்குள் இருந்து வந்த வாக்குவாதங்கள் தீரும். இடம், வீடு, நிலம் விற்கும் யோகம் உண்டு. வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத பிரச்சனை, வாக்குவாதம், டென்ஷன் நிவர்த்தியாகும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும். மற்றவர்களிடம் பிரச்சனைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. மன குழப்பமடையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த வாரத்தில் எல்லா விஷயங்களும் மாறி நன்மைகளைத் தரும். சிவபெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மீன ராசிக்கு ஜென்ம சனியிலும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்..1 விஷயத்தில் ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: சிக்ஸர் அடிக்கப் போகும் விருச்சிகம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கொட்டும் பணம்.. திருமணத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு பராபவ ஆண்டில் அதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு கோடீஸ்வர யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications