Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது
Simmam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Simmam rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பதட்டம், பயம் தொடர்பான பிரச்சனையில் அதீத கவனமாக இருக்க வேண்டும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம்.
தொழில்
தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த பிரச்சனைகளில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றங்களும், அனுகூலங்களும் காணப்படும். தேவையில்லாமல் மற்றவர்களைக் காயப்படுத்தி, உங்களையும் காயப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவு, நட்பு தொடர்பான விஷயங்களில் 24 வயதைக் கடந்தவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவேசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
திருமண யோகம்
7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமர்திருக்கும் சூழல். குரு பார்வை உள்ளது. நிறைய விஷயங்கள் சாதகமாக நடக்கும். பொறுப்பு அதிகரிக்கும். பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சந்திரன் இடமாற்றத்தைக் கொடுப்பார். அலைச்சல்கள் ஏற்படும். கவனக்குறைவு ஏற்படும். திருமண வரன் அமையும். திருமண யோகம் உண்டாகும். திடீர் பண வரவுகள் உண்டாகும்.
குரு பார்வை
குரு பார்வை பலம் வரும் 12 ஆம் தேதியில் இருந்து நன்றாக இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஒருவிதமான மன வேதனை இருந்து கொண்டே இருக்கும். நிறைய புலம்பல்கள் ஏற்படும். தியானம் செய்வது நன்மையைத் தரும். முக்கியமான முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பண வரவு
அற்புதமான பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வடிவுடை அம்மன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications