சிம்ம ராசிக்கு வக்கிர சனியால் வரப்போகும் மாற்றங்கள்.. சாதகமா?.. பாதகமா?
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.
காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
சனியின் தாக்கம்
துப்புரவுப் பணியாளர்கள், உடல் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனியின் மூலமாக வேலையில் ஏற்றம், வேலை மாற்றம், அரசியலில் செல்வாக்கு பெறுவது சனி பகவானால் தான். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சனி வக்கிரகதி அடைவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் விமானங்கள், ரயில்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி பலன்
மகம், பூரம், உத்திரம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது சிம்ம ராசி. ராசியின் அதிபதி சூரிய பகவான். உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் சனி வக்ரகதி அடைகிறார். ராசிக்கு சமசப்தமத்தில் இருக்கும் சனி வக்கிரகதி அடைவதால் எதிர்பாலினத்தரால் பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்சனை வரும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் பிரச்சனை
கணவனுக்கு, மனைவியாலும், மனைவியால் கணவனுக்கும் இடையில் பிரச்சனை உண்டாகும். கூடாநட்பு, கடன் அதிகளவில் வாங்குவதற்கான சூழல் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சிறு சிறு தடைகள் ஏற்படும். உங்களுடைய ராசிக்கு 3 ஆம் இடத்தையும், உங்கள் ராசியையும், 4, 9 ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் தந்தையின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்படும்.
தொழில்
புதிய பதவி, புகழ், அந்தஸ்து, கெளரவத்தில் சற்று கலங்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். வக்கிர பெயர்ச்சி காலமான நாலரை மாதத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் லாபங்கள் குறையும். தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். பார்ட்னர்ஷிப் தொழில்களில் பிரச்சனைகள் அதிகளவில் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
அரசுத் துறை
இரண்டாவது ஒன்றரை மாதத்தில் தொழில் சுமாராகவே இருக்கும். லாபங்களில் பிரச்சனை, வேலையாட்கள் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் வரும். அரசியல் செல்வாக்கு, அரசியல், அரசாங்கம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக பாதிப்புகள் ஏற்படும். மாறுதல்கள் வரும். சீனியர்கள் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் வரும். உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.
பாக்கியங்கள்
உங்களுக்கு வரும் பாக்கியங்கள் தடைபடும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் தடைகளைச் சந்திப்பீர்கள். பேச்சு, ஆரோக்கியம், எதிர்பாலினத்தவர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாணவ, மாணவிகளுக்கு மன அமைதி இல்லாமை, மறதி உண்டாகும். வேலையாட்களால் பிரச்சனைகள் வரும். திருநல்லாருக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது அனைத்து விதமான ஏற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும். அந்தணர்களுக்கு குடைகள் தானமாக வழங்குவது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications