Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. பொறுமை ரொம்ப முக்கியம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் முழுவதும் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசியில் சூரியன் இருப்பதால் உஷ்ண நோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிரங்கு, தோல் பிரச்சனை, கட்டி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில், தோள்பட்டை வலி போன்றவற்றில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
மற்றவர்கள் தலையீடு
தண்ணீர் குடிக்காவிட்டால் இந்த காலகட்டத்தில் கட்டாயமாக பாதிப்புகள் ஏற்படும். பெண்கள் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இணக்கமாகவும், சுமூகமாகவும் செல்வது நல்லது. உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே சமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பதும் நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். கையெழுத்து போடும் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அரசுத் துறை, அதிகாரிகள் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்யாத பழி பாவங்களுக்கு ஆளாகக் கூடிய நிலை ஏற்படும்.
பொறுமை முக்கியம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு சிறிது காலம் ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையாகச் செல்வது நல்லது. இளம் வயதை சார்ந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த மன அழுத்தங்கள் படிப்படியாக குறையும். பெற்றோர், பெரியோர் உங்களைத் தாங்கி நின்றி உங்களுடைய குறைகள் அனைத்தையும் தீர்த்துக் கொடுப்பார்கள்.
கவனம் தேவை
24 வயதான சிம்ம ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். காதல், கணவன், மனைவி என எந்த ஒரு உறவானாலும் மனம் விட்டுப் பேசி பிரச்சனையை தீர்த்து முடித்துக் கொள்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் விஷயங்களில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் சிறிது இணக்கமாகச் செல்வது நல்லது. உணர்ச்சிவசப்படுவது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
வழிபாடு
விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆரோக்கியம், கோபப்படுவது, உணர்ச்சிவசப்படும் விஷயங்களில் மட்டும் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications