Simmam: சிம்ம ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. வேலை, தொழிலில் சூப்பர் முன்னேற்றம்!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் சிம்ம வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினர் விலையுயர்ந்த பொருள்களை கையாளும் போது இந்த ஒரு வருடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபமில்லாமல் இருப்பது நல்லது. பிள்ளையார் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.
ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். தெம்பும், தைரியமும் ஏற்படும். மனதில் இருந்த பாரங்கள் குறையும். ஒருநாள், இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் அமைப்பு உண்டு. புத்துணர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மரண பயங்கள் நீங்கும்.
பணவரவு
அழுவது, கஷ்டப்படுவது, தூக்கத்தை கெடுத்துக் கொள்வது போன்ற அமைப்புகள் மாறும். நம்மிடம் அன்பாக இருந்தவர்கள் இப்போது இல்லை என்று வருத்தப்படுவது, கற்பனை செய்வது போன்ற அமைப்புகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பணவரவு உண்டாகும். நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து உண்டாகும். ஆத்ம ரீதியான நம்பிக்கை ஏற்படும்.
ஏற்றங்கள் உண்டாகும். அனுகூலமான அமைப்பு ஏற்படும். வைகாசி மாதம் சிம்ம ராசியினருக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக முக்கிய முன்னேற்றங்களை தரக்கூடிய காலமாக இருக்கும். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
முயற்சிகளில் வெற்றி
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் பணிகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க முடியும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முயற்சிகள் வெற்றி பெறும் சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறைந்து நல்லிணக்கம் அதிகரிக்கும்.
உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனஅழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும் காலமாக அமையும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications